மனசு பூ மாதிரிதான்! அதுக்காக இப்படியா? அந்தரத்தில் நிக்கவிட்டு ஷோ காட்டும் தமன்னா
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கல்லூரி படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தமன்னா.
அதனை தொடர்ந்து தனுஷ், விஜய், அஜித், ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா என அனைத்து முன்னனி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து டூயட் பாடினார்.
அதே சமயம் மற்ற மொழி முன்னனி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
tamannah
தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் வெப் சீரிஸிலும் அம்மணி தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்.
லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற வெப் சீரிஸில் தமன்னா மிகவும் ஆபாச காட்சிகள் நிறைந்த சீனில் நடித்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அந்த சீரிஸில் நடித்திருக்கும் நடிகரான விஜய் வர்மாவையும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டே வருகின்றன.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடும் தமன்னா தனது இஸ்டா பக்கத்தில் ஒரு வித்தியாசமான உடையணிந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.