Tamannah: ஹிந்தி பேசும் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அதிகம் நடித்தவர் தமன்னா. தமிழில் கல்லூரி என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வளர்ந்து மார்க்கெட்டை பிடித்தார். தமிழில் கார்த்தி, சூர்யா, விஷால், தனுஷ், ஜெயம் ரவி என எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்தார். அஜித்துடன் வீரம் படத்தில் நடித்த தமன்னா, விஜயுடன் சுறா படத்தில் நடித்தார். இந்த படம் ஓடாது என தெரிந்தே நடித்தேன் என சொல்லி விஜய் ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளானார்.

ஹிந்தியில் கிளுகிளுப்பான வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை சூடேற்றினார். அப்படி நடித்த விஜய் வர்மா என்கிற பாலிவுட் நடிகருடன் தமன்னாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடிய காவாலா பாடல் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானது. இந்த பாடல் இவ்வளவு ஹிட் அடிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் ஆர்வத்துடன் நடனமாடியிருப்பேன் என சொல்லியிருந்தார்.

ஒருபக்கம், மில்க் பியூட்டியை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், தமன்னாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
