நம்ம அண்ணாச்சியுடன் சேர்ந்து நடிப்பீங்களா..?..தமன்னா சொன்ன பதிலை பாருங்க!......
ஜேடி & ஜெர்ரி இயக்கத்தில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ லெஜெண்ட்’. இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் இரண்டு சிங்கிள்களுமே வெளியான நிலையில் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. படம் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் உருவாகியுள்ளதால் 5 மொழிகளில் எடுக்க முடிவெடுத்துள்ளோம். ஒரு பேன் இந்தியா படமாக உருவாக வாய்ப்புள்ளது என கூறினார். மேலும் சரவணன் கூறுகையில் தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு முக்கிய படமாக அமையும் என நம்பிக்கையோடு கூறினார்.
மேலும் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை தமன்னா, சரவணன் பற்றி பெருமையாக பேசினார். மேலும் கூறுகையில் சரவணனுக்கு சினிமாவில் நடிப்பது ரொம்ப நாளாகவே அவர் மனதில் இருந்த மிகப்பெரிய ஆசை என கூறினார். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. மென் மேலும் நிறைய படங்கள் அவர் நடிக்க வேண்டும் என கூறினார்.
இந்த நிலையில் நிரூபர்கள் தமன்னாவிடம் “ நீங்கள் அவருடன் சேர்ந்து நடிப்பீர்களா?” என்று கேட்டனர். அதற்கு தமன்னா” இப்போது நான் கிடைத்த படங்களில் எல்லாம் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை, எனக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே அந்த படத்தில் நடித்து வருகிறேன்” என்று கூறி அம்மணி நைசா எஸ்கேப் ஆனார்.