Cinema News
பணத்துக்காக இப்படியா?.. பிட்டு பட நடிகையாக மாறிய தமன்னா! விரக்தியில் ஜெயிலர் படக்குழு
இன்று இணையத்தையே அதிரவைத்தது தமன்னாவின் அந்த வீடியோ. வீடியோ மற்றும் தமன்னாவின் புகைப்படங்கள் வெளியாகி சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஒரு முன்னனி நடிகையாக இருக்கும் தமன்னா இப்படி பண்ணலாமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பிற மொழிகளிலும் ஒரு முன்னனி நடிகையாகவே வலம் வருகிறார் தமன்னா. அதுமட்டுமில்லாமல் அனைத்து முன்னனி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர். தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்ய போவதாகவும் சில செய்திகள் வைரலாகி வந்தது. இதற்கிடையில் விஜய் வர்மாவும் தமன்னாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இன்று இணையத்தில் வைரலானது.
அதாவது அந்தப் புகைப்படம் லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற ஒரு வெப் சீரிஸுக்காக எடுக்கப்பட்ட காட்சிகள். ஆனால் வெப் சீரிஸை பொறுத்தவரைக்கும் எந்த ஒரு ரூல்ஸூம் கிடையாது. அதனால் ஏகப்பட்ட கெட்டவார்த்தகைகள் மற்றும் ஆபாச காட்சிகளை வெப் சீரிஸில் பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு சென்சார் தடையும் கிடையாது.
அதனால் தமன்னாவும் விஜய் வர்மாவும் அந்த வெப் சீரிஸில் ஒரு சில ஆபாசக் காட்சிகளில் நடித்திருக்கின்றனர். விஜய் வர்மா அதே போன்ற ஒரு சில படங்களில் நடித்து பழக்கப்பட்டவர். ஆனால் தமன்னாவும் இப்படி நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆபாசக் காட்சிகள் மட்டுமில்லாது முகம் சுழிக்க வைக்கும் வசனங்களோடு அந்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் ஜெயிலர் படக்குழுவும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். ஏனெனில் ஜெயிலர் படத்தில் தமன்னாவுக்கு கௌரவமான கதாபாத்திரமாம். இரு படங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக இருப்பதால் ஜெயிலர் படத்திற்கு ஒரு வித பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனராம்.
இருந்தாலும் சமூகத்தில் ஒரு மதிக்கத்தக்க நடிகையாக இருந்த தமன்னா பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என்று ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார்.