பாத்தாலே பத்திக்கும் போல!.. விண்டேஜ் லுக்கில் ஹைவோல்டேஜ் ஏத்தம் தமன்னா!..
மும்பையை சேர்ந்த தமன்னா ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஒன்றும் நடக்கவில்லை என்பதால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் போனார். தமிழில் கல்லூரி என்கிற படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நடிக்க துவங்கினார். ஒருபக்கம் தெலுங்கில் இளம் நடிகர்களுடனும், அறிமுக நடிகர்களுடனும் நடிக்க துவங்கினார்.
தமிழில் கிட்டத்தட்ட கமல்ஹாசனை தவிர மற்ற அனைத்து ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். விஜயுடன் சுறா படத்திலும், அஜித்துடன் வீரம் படத்திலும் நடித்தார். ரஜினியுடன் ஜோடியாக நடிக்க முடியவில்லை என்றாலும் அவர் நடித்த ஜெயிலர் படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டினார்.
ஜெயிலர் படம் வெற்றி பெற்றதற்கு அந்த பாடலும் ஒரு காரணமாக இருந்தது. இந்த பாடல் மூலம் பேன் இண்டியா அளவில் தமன்னா பிரபலமாகியிருக்கிறார். ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். அதோடு, படுக்கையறை காட்சிகளிலும் துணிந்து நடித்து வருகிறார்.
இதனால் காஜி ரசிகர்களும் தமன்னாவுக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியிலும் நடனமாடிய தமன்னாவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்துவிட்டனர். ஒருபக்கம் தனது சம்பளத்தையும் தாறுமாறாக ஏற்றிவிட்டார் தமன்னா.
அதோடு, மில்க் பியூட்டியை விதவிதமாக காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விண்டேஜ் லுக்கில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்.