சேலை கட்டி வந்த சிலை நீ!...டாப்ஸியை தாறுமாறா வர்ணிக்கும் ரசிகர்கள்...
by சிவா |
X
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.
அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆரம்பம், பேபி, காஞ்சனா 2 , கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தார்.
இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் அவரின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. எனவே, பாலிவுட்டில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதன் காரணமாக மும்பையிலேயே அவர் செட்டில் ஆகிவிட்டார். ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவை கட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story