வேறு வழி தெரியல ஆத்தா! வாய்ப்பு கிடைக்காததால் இந்த நிலைமைக்கு ஆளான டாப்ஸி

Published on: July 29, 2023
tapsee
---Advertisement---

தென்னிந்திய நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி பன்னு. தமிழ் உட்பட ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார் டாப்ஸி. அதன் பின் ஆரம்பம், காஞ்சனா போன்ற படங்களில் நடித்தார்.

ஆடுகளம் படத்தை அடுத்தே டாப்ஸிக்கு தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இளம் நடிகையாக அழகான தோற்றத்துடன் இருந்த டாப்ஸி திடீரென பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டில் ஒரு முன்னனி நடிகையாகவே திகழ்ந்தார்.

taapsee1
taapsee1

பல நல்ல திரைப்படங்களில் நடித்து ஹிந்தியில் ஒரு போற்றப்படும் நடிகையாக வலம் வந்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென வாய்ப்புகள் ஏதும் இன்றி ஒரு பெரிய பின்னடைவு டாப்ஸிக்கு வந்தது. இதனிடையில் அரசியல் சார்ந்த கருத்துக்களை அவ்வப்போது தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருவார் டாப்ஸி.

இதையும் படிங்க : 60 வயசுல இதெல்லாம் தேவையா?!.. ஹீரோயினுக்கு ஆசைப்பட்டு அசிங்கப்பட்ட இயக்குநர்!..

ஒரு வேளை அதன் காரணமாகக் கூட இவருக்கு வாய்ப்புகள் குறைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. யாராவது சூழ்ச்சியினால் வாய்ப்புகள் பறிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் டாப்ஸி கோடம்பாக்கம் பக்கம் திரும்பியிருக்கிறார்.

taapsee2
taapsee2

தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம். ஏற்கெனவே ஃபேஷன் ஸ்டூடியோ நிறுவனம் டாப்ஸியை விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்திருந்ததாம்.

ஆனால் டாப்ஸியால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லையாம். இப்போது அதே நிறுவனத்திற்கு டாப்ஸி வேறொரு படத்திற்காக கமிட் ஆகியிருக்கிறாராம். ஏலியன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் ஏலியனாகவே வருகிறாராம் டாப்ஸி. சையின்ஸ் ஃபிக்‌ஷன் கதையில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

டாப்ஸி நடிக்கும் இந்த ஏலியன் திரைப்படத்தை அருள் நிதியை வைத்து கே – 13 என்ற படத்தை எடுக்கும் பரத் நீலகண்டன் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறாராம். இதற்கான பிரம்மாண்டமான செட் ஈவிபி பிலிம் சிட்டியில் தயாராகி கொண்டிருக்கிறதாம்.

இதையும் படிங்க : எல்லா ஏரியாலயும் அண்ணன் கில்லி! ஹீரோயினாக மாறிய யோகிபாபு – ஹீரோ யாருனு தெரியுமா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.