More
Categories: Cinema History Cinema News latest news

தமிழ்சினிமாவின் முதல் கவர்ச்சி குயின்…இவர் தான்..! உங்களுக்கு யாருன்னு தெரிஞ்சிக்க ஆசையா…?!

எத்தனையோ கதாநாயகிகள் தற்போது கவர்ச்சி அலை வீச நடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் கவர்ச்சிக்கென்று தனியாக நடிகைகள் இருந்தனர்.

ஆனால் இன்று ஹீரோயினே காட்டும் கவர்ச்சி எல்லை மீறும் அளவு போய்க்கொண்டுள்ளது. இந்தக் கவர்ச்சி அலை தமிழ்த்திரை உலகில் அடிக்க முதலில் காரணமாக இருந்தவர் யார் தெரியுமா?

Advertising
Advertising

அவர் தான் தவமணி தேவி. இவர் 1948ல் வெளியான ராஜகுமாரி படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் கலைஞர் கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் மிகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

அப்போதே கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் ஆகியவற்றை முறைப்படி கற்றுத் தேர்ந்தார். சிறந்த குரல்வளம் இவரது உணர்வுப்பூர்வமான நடிப்புக்கு ஊன்றுகோலாய் இருந்தது.

Thavamani Devi

இவரை லண்டன் பிபிசி ரேடியோவில் ‘நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்பட்டார். கேம்பிரிட்ஜ் பல்கலையில் சீனியர் பிஏ. பட்டப்படிப்பை முடித்தார். இவரது சொந்த ஊர் இலங்கையின் கண்டி.

இவரது தந்தை தமிழர். தாய் சிங்களத்தைச் சேர்ந்தவர். அங்கே இருந்த இவருக்கு தமிழ்சினிமாவில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று கேட்கலாம்.

இலங்கைக்கு ஒரு சமயம் இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் வந்தார். அப்போது நடிகை தவமணி தேவியின் நடன திறமையைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பள்ளியில் சென்று சந்தித்திருக்கிறார்.

சினிமாவில் நடிக்க விருப்பமா என்று கேட்டார். திடீரென இப்படிக் கேட்டதும் ஒரே பதற்றமானார் தவமணி.

உடனே தனது தந்தையிடம் கேட்கும்படி சொன்னார். டங்கன் அவரது பெற்றோரிடம் இதுபற்றி கேட்க, தாய் மறுத்துவிட்டார். பிறகு தாயை சம்மதிக்க வைக்க தந்தையிடம் பேசியுள்ளார் தவமணி. இப்படித் தான் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது என்றார்.

தவமணி தேவியை முதலில் அறிமுகப்படுத்தியவர் டி.ஆர்.சுந்தரம். புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை நிறுவியர். இவர்களது முதல் தயாரிப்பு சதி அகலிகை என்ற படம். இதில் தவமணி நடித்தார்.

அகலிகையாக வரும் தவமணி அணிந்த உடைகள் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல…ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

MGR, Thavamani devi

1940ல் வெளியான வனமோகினி படம் தவமணிக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. இந்தப்படத்தில் கவர்ச்சித் தாரகையாக தவமணி டூ பீஸ் உடை அணிந்து நடித்தார். ரசிகர்கள் வட்டாரத்தில் தவமணியின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. செக்ஸ் குயின், கனவுக்கன்னி என ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டார்.

வித்யாபதி என்ற படத்தில் இவர் தேவதாசியாக நடித்தார். இவர் இந்தப்படத்திற்காக அதோ ரெண்டு பிளாக் என்ற பாடலில் ஆங்கில வார்த்தைகளை சேர்த்துள்ளார்.

1948ல் ஹீரோவையே மயக்கும் திறமையான வேடம் இவருக்குக் கிடைத்தது. அது எந்தப் படத்தில் தெரியுமா? ராஜகுமாரி. அப்போதே இவர் லோ கட் ஜாக்கெட் அணிந்து…கவர்ச்சியை வாரி இறைத்தார். இந்தப் படத்தில் பல சீன்கள் சென்சாரில் கட்டாயின.

Thavamani devi

1940களில் தமிழ்த்திரை உலக சூப்பர்ஸ்டாராக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதரை விட தவமணி தேவி தான் அதிக சம்பளம் வாங்கியுள்ளார். தந்தை பெரியாருக்குப் பிடித்த கவர்ச்சி நடிகையும் இவர்தானாம்..!

இவர் நல்ல பீல்டில் இருந்த போது ராமேஸ்வரத்தில் உள்ள கோடிலிங்க சாஸ்திரியைக் காதலித்தார். 1956ல் இவர்களது திருமணம் மதுரையில் நடந்தது. அதன் பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஆன்மிகத்தில் மூழ்க ஆரம்பித்தார். ராமேஸ்வரத்தில் 10.02.2001ல் காலமானார்.

Published by
sankaran v

Recent Posts