உள்ளாடை அணியாமல் வந்து படக்குழுவினரை ஸ்தம்பிக்க வைத்த பிரபல நடிகை… ஆனாலும் இப்படியா அடம்பிடிக்கிறது??

by Arun Prasad |   ( Updated:2023-01-05 09:42:50  )
Rajakumari
X

Rajakumari

1947 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், மாலதி, டி.எஸ்.பாலைய்யா, தவமணி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ராஜகுமாரி”. இத்திரைப்படம்தான் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். அதே போல் நடிகை மாலதி கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படமும் இதுதான்.

“ராஜகுமாரி” திரைப்படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கியிருந்தார். ஜூப்பிடர் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது. இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Thavamani Devi

Thavamani Devi

இத்திரைப்படத்தில் நடிகை தவமணி தேவி, டி.எஸ்.பாலையாவை மயக்குவது போல் நடனமாடும் ஒரு பாடல் காட்சியை படமாக்கத் தொடங்கினார்களாம். அப்போது அந்த படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்த தவமணி தேவியின் உடையை பார்த்து அங்கிருந்தவர்கள் அப்படியே ஸ்தம்பித்துப்போய்விட்டனராம்.

அதாவது தவமணி உள்ளாடை எதுவும் அணியாமல் வெறும் மேல் ஜாக்கெட்டை மட்டும் போட்டுவிட்டு வந்தாராம். மேலும் அந்த ஜாக்கெட் கொஞ்சம் இறங்கியிருந்ததால் மிகவும் ஆபாசமாக தெரிந்ததாம். இதனை பார்த்த இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, தவமணி தேவியிடம் “ஜாக்கெட்டை கொஞ்சம் டைட் ஆக தைத்துவிட்டு வருகிறார்களா?” என கேட்டாராம்.

Thavamani Devi

Thavamani Devi

அதற்கு அவர் “என்னுடைய கதாப்பாத்திரம் ஒரு வில்லி கதாப்பாத்திரம். டி.எஸ்.பாலைய்யாவை மயக்குவதற்குத்தானே நான் நடனமாடுகிறேன். அப்படி இருக்கும்போது இப்படி இருந்தால்தானே சரியா இருக்கும்” என பிடிவாதம் பிடித்தாராம். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கேட்கவில்லையாம்.

ஆதலால் ஏ.எஸ்.ஏ.சாமி ஜூப்பிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தாரான சோமசுந்தரத்தை அழைத்தாராம். சோமசுந்தரமும் தவமணி தேவியிடம் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவர் கேட்கவில்லையாம். இறுதியாக இருவரும் ஒரு யோசனைக்கு வந்தார்களாம். அதாவது அந்த ஜாக்கெட்டிற்கு நடுவே ஒரு காகிதப்பூவை சொருக்கிக்கொண்டு நடனமாடுவதாக முடிவு செய்யப்பட்டதாம். அதன் பிறகு தவமணி தனது ஜாக்கெட்டுக்கு நடுவே ஒரு காகிதப்பூவை சொருகிக்கொண்டு நடனமாடினாராம்.

Next Story