நடிகை பண்ண காரியம்!..அது மட்டும் நடக்கலைனா எம்.எஸ்.வி யாருனே தெரியாம போயிருக்கும்!..
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளராக திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன், அப்போது மிகவும் பிரபலமான கலை இயக்குனராக திகழ்ந்த கங்காவுடன் இணைந்து பாக்யலட்சுமி புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
அந்த காலங்களில் இசையில் பெரிய சக்கரவர்த்தியாக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் இசையில் அமைந்த படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாகவே அமைந்திருக்கின்றன. எம்ஜிஆரின் வெற்றிப்படங்களுக்கு எம்.எஸ்.வியின் பாடல்களும் ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கின்றன.
ஆனால் முதலில் பல பிரபலங்களுக்கு எடுபுடி வேலை தான் பார்த்து வந்திருக்கிறார் எம்.எஸ்.வி. அப்படி ஒரு சமயத்தில் அந்த காலத்தில் இசையில் கைதேர்ந்தவராக இருந்த நாயுடு என்பவருக்கு உதவியாளராக தான் வேலை பார்த்து வந்திருக்கிறார் எம்.எஸ்.வி.
ஒரு சமயம் அவரது இசையில் நடிகை டி.ஆர்.ராஜகுமாரி நடிப்பில் ஒரு படம் தயாராகி கொண்டிருக்க உடனே அந்த நாயுடு என்பவர் சிறிது நேரம் வெளியில் சென்று விட்டாராம். அப்பொழுது அருகில் இருந்த எம்.எஸ்.வி நாயுடுவின் ஹார்மோனியம் பெட்டியை சும்மா தொட்டு பார்க்க அப்படியே இசைத்துக் கொண்டிருந்தாராம். சிறிது நேரத்தில் டி.ஆர்.ராஜகுமாரி அங்க வர எம்.எஸ்.வி பெட்டியில் இருந்து கை எடுத்து விட்டாராம். ஆனால் எல்லாம் அறிந்த டி.ஆர்.ராஜகுமாரி எம்.எஸ்.விக்கு ஒரு ஹார்மோனியம் பெட்டியை வாங்கி கொடுத்து கையில் 500 ரூபாய் பணமும் கொடுத்து இதை வைத்து நீ வாசி என்று சொல்லி கொடுத்தாராம் டிஆர்.ராஜகுமாரி.இதை எம்.எஸ்.வி அவரது கட்டுரையில் எழுதியிருக்கிறார் என்பதை கலைஞானம் தெரிவித்தார்.