Connect with us

பொறுத்து பொறுத்து வெறுத்துப்போன த்ரிஷா.. வெப் சீரியஸில் நடிக்கப் போகிறார்….

trisha

Cinema News

பொறுத்து பொறுத்து வெறுத்துப்போன த்ரிஷா.. வெப் சீரியஸில் நடிக்கப் போகிறார்….

லேசா லேசா திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. இப்படம் 2001ம் ஆண்டு வெளியானது. கடந்த 20 வருடங்களாக திரைத்துறையில் நீடித்து வருகிறார். இதில் சில வருடங்கள் அவர் முன்னணி கதாநாயகியாக அவர் வலம் வந்தார். விஜய், அஜித், கமல், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமா உலகிலும் கால் பதித்து முன்னணி நடிகையாக மாறினார்.

அதன்பின் நயன்தாராவின் மார்கெட் உச்சத்தில் செல்ல திரிஷாவின் மார்கெட் கீழே இறங்கியது. அதோடு, ஹன்சிகா, அனுஷ்கா போன்றவர்களும் போட்டியில் வர மார்க்கெட் இழந்தார். அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிகை குறைந்து போனது.

trisha

மேலும், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்த அவர் அதிலிருந்தும் ஒதுங்கி இருந்தார். திடிரென சிம்புவுடன் அவர் நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் 96 படத்தில் அவரின் நடிப்பும் பாராட்டை பெற்றது. அதன்பின் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடித்து வருகிறார்.

அவருடன் நடிக்க வந்த நயன்தாரா தற்போதும் லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நிலையில் திரிஷாவின் மார்க்கெட் அதாள பாதாளத்திற்கு போய் விட்டது. அவரை முன்பு போல் சினிமாக்களில் பார்க்க முடியவில்லை. ஒருவகையில் மார்க்கெட் இழந்த நடிகையாகவே அவர் மாறிவிட்டார்.

trisha

இந்நிலையில், வேறு வழியில்லாமல் ஒரு வெப் சீரியஸில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த வெப் சீரியஸுக்கு பிருந்தா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக திரிஷாவுக்கு ஒரு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இந்த வெப் சீரியஸ் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top