ஆண்ட்டின்னு எவன் சொன்னான்?!. அசத்தலான அழகில் மயக்கும் திரிஷா.. போட்டோ உள்ளே!...

by சிவா |
trisha
X

trisha

Actgress trisha: மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர் திரிஷா. மாடலிங் துறையில் ஐஸ்வர்யா ராய் போல வரவேண்டும். சினிமாவிலெல்லாம் நடிக்கக் கூடாது என்பது இவரின் ஆசையாக இருந்தது. ஊடகங்களில் பேட்டி கொடுக்கும்போது சினிமாவில் கண்டிப்பாக நடிக்கவே மாட்டேன் என சொன்னவர்தான் திரிஷா.

ஆனால், சிம்ரன் உள்ளிட்ட சில நடிகைகளின் படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக கூட நடித்தார். லேசா லேசா படம் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். அதன்பின் கடந்த 21 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். சினிமாவில் நயன்தாராவுக்கெல்லாம் சீனியர் இவர்.

trisha

தமிழில் விஜயுடன் திருப்பாச்சி, கில்லி, அஜித்துடன் கிரீடம், விக்ரமும் சாமி என பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி போன்ற இளம் நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு சினிமா பக்கம் சென்றும் அங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

trisha

இடையில் மார்க்கெட் இழந்து திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். விண்ணை தாண்டி வருவாயா படம் மூலம் இவருக்கு செகண்ட் இன்னிங்ஸ் துவங்கியது. இப்போது பொன்னியின் செல்வன், லியோ என கலக்கி வருகிறார். அஜித் இப்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார்.

trisha

ஒருபக்கம், விழாக்களில் கலந்து கொள்ளும் புகைப்படங்களையெல்லாம் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஒரு சினிமா விழாவில் திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

trisha

Next Story