கோலிவுட் நடிகைங்க அந்த விஷயத்துல வேஸ்ட்!...இப்படி சொல்லிட்டியே திரிஷா...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ஏராளமான தமிழ் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். பல முன்னனி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்டவர்.
இன்னும் இளமை குறையாமல் 18 வயது பெண் போன்ற தோற்றத்தில் இருந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இவரது நடிப்பில் பொன்னியில் செல்வன் படம் திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள்களாக எந்த பட வாய்ப்பும் இல்லாமல் பொன்னியின் செல்வன் படம் மீண்டும் இவருக்கு கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில் இவர் விஜய் டிவியில் ஒரு பிரபலமான நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் டிடி தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சிக்கு திரிஷாவும் நடிகர் ஜீவாவும் விருந்தினராக வந்தனர்.
அப்போது டிடி கோலிவுட்டில் நல்ல டிரஸ் பண்றது யாரு கேவலமாக டிரஸ் பண்றது யாருனு கேட்டு சில நடிகைகள் பெயரையும் லிஸ்டில் கொடுத்தார். அதில் நயன், தமன்னா, சுருதிஹாசன், அசின், ஹன்சிகா இவர்களில் யார் என கேட்டார். அதற்கு திரிஷா நல்ல டிரஸ் பண்றதுனு யாருமே கிடையாது. பாலிவுட்டில் தான் தீபிகா டிரஸ் கோடு நன்றாக இருக்கும். மேலும் டிரஸ்-க்கும் முக்கியத்துவம் கொடுப்பது பாலிவுட்டில் தான். கேவலமாக டிரஸ் பண்றது இருக்காங்க இந்த லிஸ்ட்-ல. ஆனால் சொல்லமாட்டேன் என கூறினார்.