ஐயோ வயசு பசங்க பாவம் செல்லம்!.. ஓவர் டோஸ் அழகில் உசுர வாங்கும் திரிஷா...
திரையுலகில் 20 வருடங்களுக்கும் மேல் நடித்து, ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை திரிஷா. மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்ற திரிஷா துவக்கத்தில் திரைப்படங்களில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக நடித்தார். அதன்பின் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.
பெரிதாக நடிப்பு வராது என்றாலும் அழகு மற்றும் க்யூட் எக்ஸ்பிரசன்களால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறியவர். விஜய், அஜித், ரஜினி, கமல், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை இவர்.
ஆனால், ஒரு கட்டத்தில் நயன்தாரா மார்க்கெட்டை பிடித்துவிட திரிஷா வாய்ப்புகள் இல்லமால் இருந்தார். இடையில் விண்ணை தாண்டி வருவாயா, 96 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், பொன்னியின் செல்வனில் குந்தவையாக கலக்கி இருந்தார்.
இதையும் படிங்க: வாவ் நீ செம க்யூட் செல்லம்!.. ரசிக்க வைக்கும் ரம்யா நம்பீசன்.. வைரல் புகைப்படங்கள்!..
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் மீண்டும் அடுத்த இன்னிங்கிஸை திரிஷா துவங்கியுள்ளார்.
விஜயின் அடுத்த படத்தில் திரிஷா நடிக்கவுள்ளார். மேலும், அஜித்தின் புதிய திரைப்படத்திலும் இவர்தான் கதாநாயகி எனக் கூறப்படுகிறது. ஒருபக்கம், க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இந்நிலையில், திரிஷாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.