விஜய்னாலே மாஸ் தான் போல...! அடிச்சது லக்..கோடிகளை அள்ளும் திரிஷா....
தமிழ் ரசிகர்களின் செல்லக்குழந்தையாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் பாதிமுடிவடைந்த நிலையில் படத்தின் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
இந்த படத்தை அடுத்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் முழுக்க லோகேஷ் படமாக இருக்கும் என அவரே கூறினார். அதற்கான வேலைகளில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்ச நாள் விலகி இருப்பதாக அறிவித்தார்.
எனினும் படத்தை பற்றிய அப்டேட்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றன. இந்த படத்தில் சமந்தா மற்றும் திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர் என்ற செய்திகள் பரவியது. எனினும் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பாதி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இதையும் படிங்களேன் : பாலிவுட் கவர்ச்சி புயலை தட்டி தூக்கிய சூர்யா.! விவரம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..
இந்த நிலையில் தளபதி-67 படத்தில் திரிஷா இணைந்திருப்பது மேலும் அவருக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது. இதன்மூலம் லட்சங்களில் புரண்ட திரிஷா தளபதி -67 படத்திற்கு பிறகு தன் சம்பளத்தை கூட்டியுள்ளாராம். மேலும் அவரின் நடிப்பில் தயாராகும் படமான ’ரோடு’ என்ற ஹீரோயினை மையமாக இருக்கும் இந்த படத்திற்காக தன் சம்பளத்தை 1.25 கோடியாக உயர்த்தியுள்ளாராம் திரிஷா.