அடுத்த 2 வருஷத்துக்கு அம்மணி ரொம்ப பிஸி!.. மீண்டும் ஒருமுறை சவுத் குயின்னு நிரூபிச்ச திரிஷா?!…

Published on: November 24, 2024
trisha
---Advertisement---

நடிகை திரிஷா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கிறார்.

சவுத் இந்தியன் குயின் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகை திரிஷா. கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணம் செய்து வரும் திரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இதையும் படிங்க: போற போக்குல இப்படி கலாய்ச்சிடீங்களே பாய்!… சல்மான்கான் சொன்னது யாரென்னு தெரியுதா?!…

ஆரம்ப காலகட்டத்தில் ஏகப்பட்ட ஹிட்டு படங்களை கொடுத்து வந்த திரிஷாவுக்கு இடையில் சிறிய பிரேக் வந்தது. அவ்வளவுதான் த்ரிஷா பீல்ட் அவுட் ஆகிவிட்டார் என்று பலரும் கூறி வந்தார்கள். ஆனால் அவரை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு தங்களது படங்களில் கமிட் செய்து வருகிறார்கள் இயக்குனர்கள்.

இந்த புகழுக்கெல்லாம் காரணம் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தான். அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய புகழைப் பெற்றார் நடிகை திரிஷா. அந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பெரிய பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

trisha
trisha

அதன்படி நடிகர் விஜய் உடன் லியோ என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் உடன் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். அதைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.

கிட்டத்தட்ட 19 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வரும் த்ரிஷா தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகின்றார். நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் விஷ்வாம்பரா என்கின்ற திரைப்படத்திலும், மலையாள சினிமாவில் டாவின் தாமஸ் உடன் இணைந்து ஐடென்டிட்டி என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

இதையும் படிங்க: சினிமாக்கு டாட்டா காட்டும் ஐடியாவில் அஜித்.. பரபரப்பாகும் டிசம்பர் மாதம்.. ஏங்க இப்படி?

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகின்றார் நடிகை த்ரிஷா. அடுத்த இரண்டு வருடங்களுக்கு அம்மணி கால்ஷீட் கிடைப்பது என்பதே கொஞ்சம் சந்தேகம் தான். 40 வயது கடந்த நிலையிலும் தற்போது வரை ஹீரோயினியாக மிக பிஸியான நடிகையாக அசதி வருகின்றார்.

நடிகை திரிஷா சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனக்கு கிடைக்கும் நேரங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றார். அந்த வகையில் தற்போது நடிகை திரிஷா ஐரோப்பியாவிற்கு சென்றிருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.