எத்தன பேர் வந்தா என்ன?!. எப்பவும் நீதான் ஹாட்டு!.. திரிஷாவின் வைரல் கிளிக்ஸ்…

trisha
20 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அழகிபோட்டிகளில் கலந்து கொண்டு மிஸ் மெட்ராஸ் படத்தையும் பெற்றவர் இவர்.

சினிமா இவரை விடுமா!.. துவக்கத்தில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக சில திரைப்படங்களில் நடித்த திரிஷா லேசா லேசா என்கிற திரைப்படம் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். விக்ரம், விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி போன்ற எல்லா ஹீரோக்களுடனும் நடித்தார்.

ஒருபக்கம் ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து நடித்தார். நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளின் வரவால் இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது.

தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் திரிஷாவை மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டு வந்துள்ளது. விரைவில் பொன்னியின் செல்வன் 2 வெளியாகவுள்ளது.

எனவே, இப்படத்திற்கான புரமோஷனில் படக்குழு ஈடுபட்டுள்ளது அந்த விழாவில் திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அப்படி வெளியான சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளோம். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
