30 வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே காதல்!.. இப்ப இன்னும் அதிகமா?!.. யாரப்பா சொல்றாங்க திரிஷா!…

Published on: November 22, 2024
trisha
---Advertisement---

நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவானது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

தென்னிந்திய சினிமாவில் சவுத் குயின் என்று அழைக்கப்படுபவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை திரிஷா சமீபத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் ஃபீல்ட் அவுட்டாகி இருந்தார் .அவரை மீண்டும் பிஸியாகிவிட்டார் இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய பேரும் புகழையும் பெற்றுவிட்டார் நடிகை திரிஷா.

இதையும் படிங்க: 30 நிமிடம் காத்திருந்து!.. விதவிதமா ஆர்டர் பண்ணி வெளுத்து கட்டிய நயன்?.. அதுவும் இப்படி ஒரு இடத்திலயா?…

படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளில் பட வாய்ப்புகள் வந்து குவிய தொடங்கி இருக்கின்றது. அதிலும் டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். விஜயுடன் லியோ படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, சிம்புவுடன் தக் லைப் உள்ளிட்ட திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றார்.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் மற்றொரு புறம் வெளிநாடுகளுக்கு அவ்வபோது தனது நண்பர்களுடன் சென்று வருவார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தோழிகள் 5 பேருடன் மோராக்காவுக்கு சென்றிருந்தார். இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார்.

trisha
trisha

அவருடன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பார்ட்டிக்கு சென்றிருந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை திரிஷா தற்போது ஜப்பானுக்கு சென்றிருக்கின்றார். திடீரென்று ஜப்பான் சென்றதற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கின்றதா? என்று ரசிகர்கள் அவரிடம் கேட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா ஜப்பானில் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து ’30 ஆண்டுகளாகி விட்டது.

இதையும் படிங்க: கதை சொன்ன கமல்!. எஸ்கேப் ஆன மணிரத்னம்!.. விருமாண்டி உருவான கதை!….

அப்பொழுது எவ்வளவு லவ் பண்ணேனோ, இப்போ இன்னும் அதிகமா லவ் பண்றேன். நீ ஒரு வைஃப் ஜப்பான்’ என்று பதிவிட்டு இருக்கின்றார். இந்த போஸ்ட்க்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகிறார்கள். மேலும் உங்களுக்கு வயது மட்டும் ஆகவே ஆகாதா? அப்படியே இருக்கிறீர்கள். உங்கள் அழகின் ரகசியம் என்ன? என்று தொடர்ந்து நடிகை திரிஷாவுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.