எத்தனை பேர் வந்தாலும் நீதான் க்யூட்டு!...சொக்க வைக்கும் அழகில் நடிகை திரிஷா....
சென்னையில் பிறந்துவளர்ந்தவர் திரிஷா. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மிஸ் மெட்ராஸ் பட்டமும் பெற்றார்.
துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் திரைப்படங்களில் நடித்த இவர், லேசா லேசா திரைப்படம் மூலம் கதாநாயகியாக மாறினார். அதன்பின் தமிழில் தொடர்ந்து நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறினார்.
ஒருபக்கம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
ஆனால், நயன்தாரா மார்க்கெட்டை பிடித்துக்கொண்டதால் இவருக்கான வாய்ப்புகள் பறிபோனது. அனாலும், விண்ணை தாண்டி வருவாயா படம் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வந்தார்.
தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தைவையாக நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.