More
Categories: Entertainment News

எப்பவும் உனக்குதான் மார்கெட்டு!..க்யூட் லுக்கில் வசியம் செய்யும் திரிஷா…

மிஸ் மெட்ராஸ் அழகி பட்டம் பெற்றவர் திரிஷா. திரைப்படங்களில் துணை நடிகையாகவெல்லாம் நடித்துள்ளார். லேசா லேசா படம் மூலம் கதாநாயகியாக மாறினார். அதன்பின் தமிழில் தொடர்ந்து நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறினார். இவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.

Advertising
Advertising

ஒருபக்கம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். விஜய், அஜித்,விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, சூர்யா என பலருடனும் நடித்துள்ளார்.

ஆனால், நயன்தாரா மார்க்கெட்டை பிடித்துக்கொண்டதால் இவருக்கான வாய்ப்புகள் பறிபோனது. எனவே, இவர் நடிக்கும் படங்களில் எண்ணிக்கை குறைந்து போனது.

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தைவையாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தொடர்பான புரமோஷன் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். மேலும், அந்த விழாக்களில் அழகான உடைகளை அணிந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
சிவா

Recent Posts