எத்தன பேர் வந்தாலும் எப்பவும் நீதான் டிரெண்டு!...திரிஷாவின் வைரல் கிளிக்ஸ்...
கல்லூரியில் படிக்கும்போது மிஸ் மெட்ராஸ் அழகி பட்டம் பெற்றவர் திரிஷா. திரைப்படங்களில் துணை நடிகையாகவெல்லாம் நடித்துள்ளார். லேசா லேசா படம் மூலம் கதாநாயகியாக மாறினார்.
அதன்பின் தமிழில் தொடர்ந்து நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறினார். இவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.
தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். பல ஹிட் படங்களில் நடித்தார். விஜய், அஜித், தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, சூர்யா என பலருடனும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: வடிவேலுவுடன் முதன்முதலாக இணையப்போகும் வெரைட்டி நடிகர்.. சும்மா கலக்கலா இருக்க போகுது!!
நயன்தாரா மார்க்கெட்டை பிடித்துக்கொண்டதால் இவருக்கான வாய்ப்புகள் பறிபோனது. எனவே, இவர் நடிக்கும் படங்களில் எண்ணிக்கை குறைந்து போனது. ஆனால், கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் இவர் நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படம் அவருக்கு 2வது இன்னிங்ஸாக அமைந்தது.
தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தைவையாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தொடர்பான புரமோஷன் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: ஒன்னு போட்டாலும் வொர்த் செல்லம்!…தூக்கலான கவர்ச்சியில் லாஸ்லியா…
இது தொடர்பான பல புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், சில புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.