இப்பவும் மார்க்கெட்டு உனக்குதான்!.. இன்ச் இன்ச்சா ரசிக்க வைக்கும் திரிஷா...
தமிழ் சினிமாவில் இப்போது நடித்துவரும் பல நடிகைகளுக்கும் சீனியர் திரிஷா. நயன்தாராவுக்கு முன்பே சினிமாவுக்கு வந்தவர். துவக்கத்தில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக கூட நடித்துள்ளார்.
அதன்பின் கதாநாயகியாக நடிக்க துவங்கி கோலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறினார். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஷால் என தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
ஆனால், இடையில் மார்க்கெட்டை இழந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் அவ்வப்போது சில படங்களில் நடிப்பார்.
இதையும் படிங்க: தளபதி 67 பட டைட்டிலால் புகழின் உச்சிக்கே போன அஜித்!… இது என்னப்பா வம்பா இருக்கு?..
ஆனால், அவை வெற்றிப்படமாக அமையாது. பல வருடங்களுக்கு பின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது இப்படத்தின் வெற்றிக்கு பின் இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்திலும் அம்மணிதான் கதாநாயகி. இப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திரிஷா புடவை அணிந்து கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.