இனிமே உனக்குதான் மார்க்கெட்டு!.. வாலிப பசங்களின் மனதை கெடுக்கும் திரிஷா…

by சிவா |   ( Updated:2023-04-20 05:19:31  )
trisha
X

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை திரிஷா. அதாவது 20 வருடங்களுக்கு மேல் இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

trisha

அதேநேரம், இப்போதும் இளமை மாறாத அழகில் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார். விஜய், விக்ரம், சூர்யா, அஜித் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தார். ரஜினியுடன் பேட்ட படத்திலும், கமலுடன் மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில நடிகைகளின் வரவால் இவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது.

சிம்புவுடன் ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது பொன்னியின் செல்வன் படம் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளார்.

தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் வேலையில் இறங்கியுள்ளார். பல ஊர்களுக்கும் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் திரிஷாவின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Next Story