கட்சியில் அழைப்பு...! அரசியல் எண்ணம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை திரிஷா...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் நடிகை திரிஷா பற்றி அரசியல் பிரவேசம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் பிரபலமான கை சின்னம் கொண்ட கட்சியில் முக்கிய பொறுப்பாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது. ஏற்கெனவே நடிகை குஷ்பு அந்தக் கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சிக்கு தாவி விட்டார்.
இதனால் கட்சியின் நலன் கருதி சினிமாவில் பெரிய அந்தஸ்தில் உள்ள நடிகைகளை வரவழைக்கலாம் என்ற பேச்சு நிலவிவந்த நிலையில் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கக் கூடிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திரிஷா கட்சியில் வருவதை பற்றி இன்னும் சரிவர பேச்சு இல்லை. ஆனால் மதச்சார்பின்மையும் கட்சியின் கோட்பாடுகளையும் ஏற்று திரிஷா வந்தால் நாங்கள் அவரை ஏற்று கொள்வோம் என கூறியிருக்கிறார்.
இது பற்றி திரிஷாவிடம் கேட்கையில் அப்படி எந்த எண்ணமும் எனக்கில்லை. அரசியல் ஆசையும் இல்லை. நான் என் அடுத்த படங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன் எனக் கூறியுள்ளாராம் திரிஷா.