ஐயோ கொல்லுறியே!..மனச அள்ளுறியே!...திரிஷாவின் செம க்யூட் கிளிக்ஸ்...
25 வருடங்களுக்கு முன்பே மிஸ் மெட்ராஸ் அழகி பட்டம் பெற்றவர் திரிஷா. திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த திரிஷா, லேசா லேசா படம் மூலம் கதாநாயகியாக மாறினார்.
அதன்பின் தமிழில் தொடர்ந்து நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறினார். இவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.
ஒருபக்கம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். விஜய், அஜித், தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, சூர்யா என பலருடனும் நடித்துள்ளார்.
ஆனால், இவருக்கு போட்டியாக வந்த நயன்தாரா மார்க்கெட்டை பிடித்துக்கொண்டதால் இவருக்கான வாய்ப்புகள் பறிபோனது. எனவே, இவர் நடிக்கும் படங்களில் எண்ணிக்கை குறைந்து போனது.
தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தைவையாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தொடர்பான புரமோஷன் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.