ஹாய் செல்லம்!...செம சோக்கா கீர!...எவர்கீரின் பியூட்டி திரிஷாவின் ரீசண்ட் கிளிக்ஸ்...
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தவர் திரிஷா. இவர் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்துள்ளார். தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். ஒரு படம் ஹிட் அடித்தால் தொடர்ந்து சில படங்களில் நடிப்பார். அந்த படங்கள் தோல்வியை சந்தித்தால் காணாமல் போய்விடுவார்.
இதையும் படிங்க: இந்த ஒன்னே ஒரு வாரத்துக்கு வொர்த்!…நச்சுன்னு காட்டி சூடேத்தும் அஞ்சனா…
கடந்த சில வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘குந்தவை’ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பின் மீண்டும் சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வப்போது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து தான் லைம் லைட்டில் இருப்பதாக காட்டிக் கொள்வார்.
இந்நிலையில், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.