நயன்தாராவை ஓவர்டேக் பண்ண பிளான் போட்ட திரிஷா!. இப்படி எல்லாம் வீணாப்போச்சே!..

Trisha: நயன்தாராவுக்கெல்லாம் சீனியராக இருந்தவர் திரிஷா. ஆனால், நயன் நம்பர் ஒன் இடத்தை பிடித்து லேடி சூப்பர்ஸ்டார் ஆகிவிட திரிஷாவோ மார்க்கெட்டே இல்லாமல் காணாமல் போனார். தமிழ், தெலுங்கு என அவர் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. எனவே, வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தார்.

அப்போதுதான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வரவே அப்படத்தில் நடித்தார். அப்படத்தின் வெற்றி திரிஷாவின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தியது. அவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியது. ஒருபக்கம் அவருக்கு பல படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தது.

இதையும் படிங்க: திரிஷா, தனுஷ் பற்றி மேடையில் கூல் சுரேஷ் என்ன சொன்னார் தெரியுமா?.. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்பீச்!..

அதில் எல்லாமே பெரிய படங்கள். விஜய்க்கு ஜோடியாக லியோ, அஜித்துடன் விடாமுயற்சி, மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படம் என மளமள புது படங்களில் புக் ஆனார். இதனால், மீண்டும் தனது மார்க்கெட் ஆனதால் திரிஷா சந்தோஷப்பட்டார். இதில், லியோ மட்டும் ரிலீஸ் ஆனது.

மற்ற படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால், பனிப்புயல், மழை, மணல் புயல் என பல காரணங்களால் படப்பிடிப்பு அடிக்கடி நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: விஜய்க்கு பெர்சனலா ஒன்னு சொல்லனும்! கட்சி பெயரை அறிவித்ததும் தாய் ஷோபா அனுப்பிய ஆடியோ

இதுதான் திரிஷாவை அப்செட் ஆக்கி இருக்கிறது. ஏனெனில், மற்ற படங்களுக்கு அவர் கொடுத்துள்ள கால்ஷீட் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறாராம் திரிஷா. எப்படியும் இன்னும் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கும் என சொல்லப்படுகிறது.

ஒருபக்கம், இனிமேல் அசர்பைசான் நாட்டில் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, துபாய்க்கு வேறு நாட்டில் மீதமுள்ள காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். நயன்தாரா மார்க்கெட் டவுன் ஆகி இருக்கும் இந்த நிலையில் அவரின் மார்க்கெட்டை பிடிக்க திரிஷா திட்டமிட்டார். ஆனால், அது நடக்காமல் போய்விட்டதே என ஃபீலிங்காக இருக்கிறாராம்.

இதையும் படிங்க: 1972 முதல் 2024 வரை.. கட்சி ஆரம்பித்த நடிகர்கள்! எல்லாரையும் நம்பியாச்சு.. இவரையும் நம்புவோம்

 

Related Articles

Next Story