சூடுபிடிக்கும் த்ரிஷா விவகாரம்! எல்லாத்துக்கும் மணிரத்தினம்தான் காரணம்.. என்னய்யா சொல்றீங்க?

Published on: February 23, 2024
trisha
---Advertisement---

Actress Trisha: தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் இந்த சினிமாத்துறையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். ஒட்டுமொத்த மக்களின் அபிமானங்களையும் பெற்ற நடிகையாக த்ரிஷா காணப்படுகிறார்.

ஆரம்பத்தில் ஜோடி என்ற படத்தில் சிம்ரனுக்கு தோழியாக வந்தவர்தான் த்ரிஷா. அதன் பிறகு மௌனம் பேசியதே திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருக்கும் பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தன் மார்கெட்டை உயர்த்தினார்.

இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தில் தமிழ் ஹீரோ இல்லையா? அக்கட தேசத்தில் இருந்து தூக்கப்பட்ட சூப்பர்ஸ்டார்..!

இப்படி ஒரு முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா மீது சமீபத்தில் ஒரு அரசியல் பிரமுகர் சில அவதூறான பேச்சுக்களை முன்வைத்தார். அது இணையத்தில் பற்றிக் கொண்டு எரிந்தது. இந்த செய்தி வெளியாகி கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கு பிறகுதான் த்ரிஷா தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது. அதுமட்டுமில்லாமல் அதோடு ஒரு வக்கீல் நோட்டீஸையும் அனுப்பினார்.

அதில் ஒரு கோடி இழப்பீடு கேட்டும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஏன் த்ரிஷா 24 மணி நேரத்திற்கு பிறகு ரியாக்ட் செய்தார் என்றும் ஆரம்பத்திலேயே கண்டனத்தை தெரிவித்திருந்தால் அது சம்பந்தமான வீடியோ சேனலில் இருந்து அந்த அரசியல் பிரமுகர் பேசிய வீடியோவை கட் செய்திருக்கலாமே என்றும் சில தரப்பினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதல் படத்திற்கும் கடைசி படத்திற்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒன்னு

ஆனால் அதற்கு காரணமே மணிரத்தினம்தானாம். ஏனெனில் இந்த விஷயம் வெளியாகும் நேரத்தில் தக் லைஃப் சூட்டிங்கிற்காக த்ரிஷா செர்பியாவில் இருந்தாராம். அந்த படப்பிடிப்பில் மணி ரத்தினம் போட்ட கண்டீசன் ஒரு முறை செட்டிற்குள் வந்தால் யாரும் மொபைல் பயன்படுத்தக் கூடாது என்பதுதானாம். இதனால்தான் இந்த விவகாரம் த்ரிஷாவுக்கு தாமதமாக தெரிந்திருக்கிறது என கூறப்படுகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.