அஜித், விஜய்க்கு நேரடி தாக்குதலா?.. பொசுக்குன்னு உண்மையை சொன்ன ஊர்வசி!..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கதாநாயகியாக நடித்து, தற்சமயம் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஊர்வசி. 1980களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் ஊர்வசி. 1983 இல் வந்த முந்தானை முடிச்சி திரைப்படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது.

அந்த படத்தில் வந்த அவரது பரிமளம் என்கிற கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. இதனையடுத்து அதிக பட வாய்ப்புகளை பெற துவங்கினார் ஊர்வசி. ஊர்வசிக்கு நகைச்சுவை நன்றாக வந்தது. இதனால் அவரது திரைப்படங்களில் அவரது கதாபாத்திரத்தை ஒரு காமெடி கதாநாயகியாகவே இயக்குனர்கள் அமைத்தனர்.

இதுவரை 200க்கும் அதிகமான படங்களில் ஊர்வசி நடித்துள்ளார். வயதான பிறகு தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார் ஊர்வசி சிவா மனசுல சக்தி, சூரரை போற்று, மூக்கூத்து அம்மன் என பல படங்களில் இவர் அம்மாவாக நடித்துள்ளார்.

ஊர்வசி கூறிய பதில்:

தற்சமயம் இவர் நடித்த சார்லஸ் எண்டர்ப்ரைசஸ் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்காக ஒரு பேட்டியில் இவர் பேசும்போது சினிமாவில் எழுத்தாளர்களின் இடம் எப்படி இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஊர்வசி பதிலளிக்கும்போது மலையாள சினிமாவில் எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதை உள்ளது.

ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி இல்லை. நடிகர்களை நம்பி இருக்கும் சினிமாவை நம்ப முடியாது. நடிகர்கள் மாறிக்கொண்டே இருப்போம். ஆனால் எழுத்தாளர்களால்தான் சினிமாவில் நல்ல படங்களை கொண்டு வர முடியும். உதாரணமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் பணிப்புரியும்போது அதன் வெளிப்பாடு சிறப்பாக இருக்கிறது.

எனவே எழுத்தாளர்களுக்கு திரைத்துறை மரியாதை தர வேண்டும் என கூறியுள்ளார் ஊர்வசி. தற்சமயம் விஜய், அஜித், ரஜினி மாதிரியான பெரும் நட்சத்திரங்களையே தமிழ் சினிமா நம்பியுள்ளது என்பது ஓரளவு உண்மைதான், ஆனால் நடிகர்களை நம்பி இருக்கும் சினிமாவை நம்ப முடியாது என ஊர்வசி கூறுவது இந்த பெரிய நடிகர்களை குறிப்பிட்டுதானா? என்கிற கேள்வி நெட்டிசன்களிடம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: இத செஞ்சாதான் நைட் தூக்கமே வருமாம்! அஜித்தின் ரகசியத்தை பகிர்ந்த ரோபோசங்கர்

 

Related Articles

Next Story