படமுழுக்க ஒரே அதுதான்! ச்சீ.. எஸ்.ஜே.சூர்யாவின் படத்தில் இருந்து ஓடிவந்த நடிகை!
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா. ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து அதன் பின் இரு பெரும் ஜாம்பவான்களான அஜித், விஜயை வைத்து தொடர்ந்து பெரிய ஹிட் கொடுத்த இயக்குனராக மாறினார்.
அந்தப் படங்களுக்கு பிறகு ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார். ஆனால் அந்த இரு படங்கள் தான் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படங்களாகும். அதன் பிறகு இன்று வரை அவர் இயக்குனராக தலைகாட்டாமல் ஒரு நடிகராகவே இருந்து வருகிறார்,
அவருடைய ஆசையும் நடிகராக வேண்டும் என்பதே. அந்த ஆசை தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றது. வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு தேடப்படும் நடிகராகவே எஸ்.ஜே.சூர்யா மாறியிருக்கிறார். ஆனால் அவர் நடிகராக மாறிய ஆரம்பகால படங்கள் எல்லாமே ஒரு அடல்ட் படங்களாகவே அமைந்தன.
அதனால் ரசிகர்கள் மத்தியில் ஒரு கெட்டப்பெயரை சம்பாதித்தார். டபுள் அர்த்தமுடைய வசனத்தோடே படங்கள் அமைந்தன. அதிலும் குறிப்பாக நியூ படம் முழுவதுமாக அடல்ட் படமாகவே அமைந்தது. அந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். கூடவே கிரண் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.
இந்த நிலையில் நடிகை ஊர்வசி ஒரு பேட்டியில் எஸ்.ஜே.சூர்யாவை பற்றி கூறியிருப்பார். அதாவது நியூ படத்திற்காக கிரணுக்கு டப்பிங் கொடுப்பதற்காக ஊர்வசியை அழைத்தாராம். அடிப்படையில் ஊர்வசியின் மிகப்பெரிய தீவிர ரசிகராம் எஸ்.ஜே.சூர்யா.
அதனால் அவருக்கு அந்த வாய்ப்பு கொடுத்தாராம். கிரண் அந்தப் படத்தில் ஒரு ஐயங்கார் மாமியாக வருவார். அதற்கு ஊர்வசி பேசினால் சரியாக இருக்கும் என கருதி அழைத்து வந்திருக்கிறார். வசனத்தை கொடுத்து பேசச் சொல்ல அந்த வசனம் முழுவதும் டபுள் மீனிங்காகவே இருந்ததாம். அதனால் அதை அப்படியே கொடுத்து என்னால முடியவே முடியாது என ஓடிவந்துவிட்டாராம் ஊர்வசி. இதை அவரே அந்த பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : ஆட்டோ சங்கரின் விபச்சார லிஸ்டில் பல முன்னணி நடிகைகள் – திடுக்கிட வைக்கும் தகவல்!