தமிழ் சினிமாவையே மிரள வைத்த வடிவுக்கரசி!.. அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?..
தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை வடிவுக்கரசி. தமிழ் சினிமாவில் முதன் முதலில் கன்னிப் பருவத்திலே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்திருக்கும் வடிவுக்கரசி கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஒரு சாதனைப் பெண்மணியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். சின்னத்திரையில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார் வடிவுக்கரசி. சினிமாவிற்குள் வந்த புதிதில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதன் பிறகு முன்னனி நடிகர்களின் படங்களில் அக்காவாகவும் அம்மாவாகவும் நடித்து அதன் மூலமும் பெரும் வரவேற்பை பெற்றார்.
வடிவுக்கரசியின் நடிப்பிற்கு தீனி போட்டதே அவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரங்கள் தான். அருணாச்சலம் படத்தில் ரஜினியை தன் பார்வையாலேயே மிரட்டியிருப்பார். அதுவரை வடிவுக்கரசியை அப்படி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவரின் நடிப்பு அந்தப் படத்தில் பெருமளவு பேசப்பட்டது.
இவர் பழம்பெரும் இயக்குனர் ஏ.பி. நாகராஜனின் உறவினரும் ஆவார். இந்த நிலையில் அம்மா தினம் அன்று அவரை ஒரு தனியார் சேனல் பேட்டி எடுத்தது. அந்தப் பேட்டியில் அவர் மனதில் உள்ள சில ரகசியங்களை பகிர்ந்தார். அதை கேட்ட அனைவரும் மிகவும் கலங்கி விட்டனர்.
அதாவது அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். வடிவுக்கரசியின் தாய் இறக்கும் போது கூட வடிவுக்கரசியின் அருகில் யாரும் இல்லையாம். அவர்தான் எல்லாமே பார்த்துக் கொண்டாராம். காரியம் எல்லாம் முடிந்து மறு நாளே சூட்டிங்க் கிளம்பி போய்விட்டாராம்.
மேலும் அவர் ஆசைப்பட்டு எதாவது அவருக்கு பிடித்தவர்களுக்கு வாங்கிக் கொடுப்பாராம். ஆனால் அதை அவர்கள் மிகவும் அலட்சியமாக எண்ணும் போது மிகவும் வருந்துவாராம். அதை எண்ணி நிறைய இடங்களில் அழுதிருக்கிறார். அவர் நடித்த ரோஜா சீரியலில் அவருக்கு மருமகளாக நடித்த காயத்ரி தான் வடிவுக்கரசிக்கு மிகவும் நெருக்கமாம்.
எதாவது மன சோர்வடையும் போது காயத்ரியை கட்டிப் பிடித்து அழுதுவிடுவாராம். அப்போது காயத்ரிதான் நிறைய நேரங்களில் வடிவுக்கரசிக்கும் ஆறுதலாகவும் பக்கபலமாகவும் இருந்தாராம்.இன்னொரு மகளாகத்தான் காயத்ரியை பார்க்கிறேன் என்றும் வடிவுக்கரசி கூறினார்.