தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை வடிவுக்கரசி. கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் சீரியலிலும் கொடி கட்டி பறந்து வருகிறார். சிறந்த வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க கூடிய நடிகையாக வடிவுக்கரசியை பார்க்கலாம்.

இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் கன்னிப் பருவத்திலே. இத்திரைப்படத்தில் இவர் நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தொடக்கக் காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். இவர் முன்னாள் இயக்குநர் ஏ. பி. நாகராஜனின் உறவினர் ஆவார்.
இந்த நிலையில் வடிவுக்கரசியின் ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது வடிவுக்கரசி முதல் மரியாதை என்ற திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார். பாரதிராஜா இயக்கிய அந்த படத்தில் வடிவுக்கரசியின் கதாபாத்திரம் ஒரு கொடூரமான மனைவியாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் முதலில் பாரதிராஜா சிவாஜிக்கு மனைவியாக என்று சொன்னதும் வடிவுக்கரசி கே.ஆர்.விஜயா ரேஞ்சுக்கு தன்னை தயார்படுத்தியிருக்கிறார். ஏற்கெனவே ஒரு மூக்குத்தி குத்தியிருந்த நிலையில் சிவாஜிக்கு மனைவி என்று சொன்னதும் இன்னொரு மூக்குத்தியும் குத்தினாராம். அதன் பிறகு பாரதிராஜா வடிவுக்கரசியின் வசனத்தை சொல்ல அவருக்கு ஷாக் ஆகிவிட்டதாம்.
அதாவது படத்தில் ஒரு கிளவி போன்ற வசனத்தையே சொல்லி திட்டிக் கொண்டேயிருப்பார் வடிவுக்கரசி. அதன் பிறகு தான் தெரிந்திருக்கிறது இப்படி ஒரு கொடூரமான கதாபாத்திரம் என்று. வேறு வழியில்லாமல் நடித்திருக்கிறார். ஆனால் படம் முழுக்க பாரதிராஜாவை மனதில் வைத்துக் கொண்டேதான் வடிவுக்கரசி சிவாஜியை திட்டுவது போன்ற காட்சிகளில் நடித்தாராம்.

ஆசையாய் நடிக்க வந்த என்னை இப்படி முழுவதும் அப்செட்டாக்கிட்டார் பாரதிராஜா என்று அந்த ஒரு பேட்டியில் கூறினார் வடிவுக்கரசி. ஆனால் அவரை போன்று நடிப்பது என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. அந்த அளவுக்கு ஒரு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அருணாச்சலம் படத்தில் கூட ரஜினியையே மிரட்டியிருப்பார்.
இதையும் படிங்க : உங்கள பிரைவேட்டா மீட் பண்ணனும்! ரசிகை கேட்ட கேள்விக்கு சித்தார்த் சொன்ன பதில் என்ன தெரியுமா?
