சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த சீரியலில் முக்கியமான தொடர் ‘தெய்வமகள்’ சீரியல். இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடியது. ஏராளமான ரசிகர்களை தக்கவைத்த சீரியலில் தெய்வ மகள் சீரியலும் ஒன்று.

இதில் மகா என்ற கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்து குடும்ப பெண்களை கவர்ந்தவர் நடிகை வாணிபோஜன். அந்த சீரியலில் நடிக்கும் போதே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து பல தொடர்களில் நடித்தாலும் ஓ மை கடவுளே படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார்.

நடித்த முதல் படத்திலேயே தன் முத்திரையை பதித்தார் வாணிபோஜன். அதன் பின் தொடர்ச்சியான படங்கள் வந்தாலும் சமீபத்தில் வெளியான வெப்சீரிஸ் தமிழ் ராக்கர்ஸ் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். மேலும் மிரள் படத்திலும் நடிகர் பரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இது ஒருபக்கம் இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய் இன்ஸ்டாவில் சிம்பிளான புகைப்படத்தை பதிவிட்டு
ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.
