வனிதா என்னை தூக்கி போட்டு மிதித்தார், வலி தாங்க முடியல- நடிகை துஷாரா கதறல்!!
வெயில், அங்காடி தெரு, ஜெயில் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அநீதி படத்திற்கு ஜீ.வி.பிராகஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 21ம் தேதி வெளியாக உள்ளது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அநீதி படம் வெளியாகவுள்ளதால், சமீபத்தில் இந்த படத்தின் படக்குழு பேட்டி ஒன்றை கொடுத்தனர். அந்த பேட்டியில் நடிகை வனிதா பிக்பாஸில் பார்த்ததை போல இல்ல, நேரில் பழகிப்பார்த்த போது மிகவும் ஸ்வீட்டாக இருந்தார் என்று அர்ஜூன் தாஸ் தெரிவத்தார்.
நடிகை வனிதா அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இனிமே சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளதாக வனிதா கூறியிருந்தார். அதே போல அடுத்தடுத்து பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அநீதி படத்தில் வில்லியாக வனிதா விஜயகுமார் நடித்துள்ளார்.
அந்த படத்தில் வரும் ஒரு காட்சிக்காக, நடிகை வனிதா, ஹீரோயின் துஷாராவை நிஜமாகவே தூக்கிப் போட்டு அடித்தாராம். இது குறித்து நடிகை துஷாரா விஜயன் கூறுகையில், வனிதா மிக சூப்பராக நடிப்பார். ஆனால் அடிக்க சொன்னால், நிஜமாகவே அடித்துவிடுவார். இந்த படத்தில் என்னை தூக்கி போட்டு மிதித்தார். என்னால வலி தாங்க முடியவில்லை என்று பேட்டியில் கூறியுள்ளார் துஷாரா. அடிக்கிற காட்சி வந்தால் ரியாலிட்டியாக இருக்க வேண்டுமென்பதற்காக வனிதா நிஜமாகவே அடித்துவிடுவார் என்று துஷாரா கூறியுள்ளார்.