மறுபடியும் முதல்ல இருந்தா? ஹீரோயினாக நடிக்கும் வனிதா.. ஹீரோ யாருனு தெரியுமா?

Published on: May 19, 2024
vanitha
---Advertisement---

Actress Vanitha Vijayakumar: தமிழ் சினிமாவில் விஜய் நடித்த சந்திரலேகா என்ற படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். தமிழ் நடிகரின் மூத்த நடிகராக இருப்பவர் விஜயகுமார். அவருக்கு இரண்டு மனைவிகள். அதில் இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார் என அனைவருக்கும் தெரியும்.

இதில் விஜயக்குமாரின் மற்ற மகள்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் வனிதா விஜயகுமார் மட்டும் அவர் குடும்பத்துடன் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு இப்போது இருக்கும் ஒரே ஆதரவு அவருடைய மகள்தான். இந்த நிலையில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் சரிவர அமையாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

robert
robert

இதையும் படிங்க: ‘முடிஞ்சா எழுதிப்பாரு…’ பாடலாசிரியர்களுக்கு சவால் விட்ட இளையராஜா… அசத்திய வைரமுத்து

அதனைத் தொடர்ந்து விஜய் டிவி நடத்தும் பல ரியாலிட்டி ஷோக்கலளில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இதன் மூலம் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது. சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு 25 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது என கூறியிருந்தார் வனிதா. இந்த நிலையில் அவர் இப்போது ஹீரோயினாக நடிக்கும் ஒரு படத்தின் பூஜை போடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அதில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் அவருடன் ஹீரோவாக நடிப்பது அவருடைய முன்னாள் காதலரான ராபர்ட் மாஸ்டர் என்பதுதான். இருவரும் ஏற்கனவே காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒன்றாக ஜோடி சேர்ந்து உள்ளனர். இதில் இன்னொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் வனிதாவிற்கு அம்மாவாக நடிப்பது ஷகீலா என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரிடம் சம்பளம் வாங்கியவர் அவருக்கே முதலாளி ஆன கதை!.. இது செம மேட்டர்!…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.