லீகலா 2 கல்யாணம்!. இல்லீகலா எத்தனை வேணா பண்ணுவேன்!.. 3வது கல்யாணம் பற்றி பேசும் வனிதா...

by Rohini |
vanith
X

vanith

Actress Vanitha Vijayakumar: தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான நடிகர் என்று பாராட்டப்பட்டவர் நடிகர் விஜயகுமார். குணச்சித்திர வேடங்களில் நடிக்க இவரை மிஞ்சிய நடிகர் வேறு யாருமில்லை. இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் விஜயகுமார் மஞ்சுளாவிற்கு பிறந்தவர்தான் நடிகை வனிதா விஜயகுமார்.

வனிதா ஆரம்பகாலங்களில் ஒரு சில படங்களில் நடித்து பின் நடிகர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் சினிமா பக்கமே வரவில்லை. ஆனால் கொஞ்ச நாளிலேயே அவர் திருமண வாழ்க்கை முடிவு பெற்றது. அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதையும் படிங்க: அப்டேட் இல்லனாலும் பரவால்ல!. இப்படியே போட்டோ போடு தல!.. மாஸ் லுக்கில் அஜித்குமார்..

அடுத்ததாக நடிகர் ஆனந்த்ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவருடனும் ஒற்றுமையாக வாழ்ந்தாரா என்றால் இல்லை. அந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை. அதன் பிறகு அவர் திருமணமே செய்யவில்லை. இதை பற்றி வனிதாவிடம் நிருபர் ஒருவர் உங்களுக்கு சட்டப்படி நடந்த திருமணம் எத்தனை? இனிமேலும் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த வனிதா விஜயகுமார் சட்டப்படி எனக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றன. அதுவும் சட்டப்படியே விவாகரத்தும் ஆகிவிட்டது என்று கூறினார். அதற்கு அந்த நிருபர் அப்போ இல்லீகலா எத்தனை திருமணம் என கேட்டார். அதற்கு வனிதா இல்லீகலா எத்தனை திருமணம் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். அதை யார் தவறு என சொல்லப் போகிறார்கள் என்று பதிலுக்கு கூறினார்.

இதையும் படிங்க: என்னய்யா நடக்குது! இணையத்தை தெறிக்கவிடும் அஜித்.. விடாமுயற்சி அப்டேட்டை வாரி வழங்கிய மேனேஜர்

மேலும் தனது மூன்றாவது திருமணம் பற்றியும் வனிதா கூறியிருந்தார். இப்போதைக்கு யார் மேலேயும் கிரஷ் இல்லை. அது இனிமேல் வரவும் வராது. அந்த வயசெல்லாம் போய்விட்டது. அப்படியே மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டாலும் கண்டிப்பாக உங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டுத்தான் பண்ணுவேன் என்று கூறினார்.

இதில் மூன்றாவதாக பீட்டர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவரை எந்த லிஸ்ட்டில் சேர்க்கிறது என இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Next Story