
Cinema News
சங்கரோட அந்த படத்தில் வரலட்சுமி நடிக்க வேண்டியது! சரத்குமாரால் கைமீறி போன வாய்ப்பு
தமிழ் சினிமாவில் வரலட்சுமி ஒரு முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வரும் வரலட்சுமி ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக காணப்படுகிறார். தமிழில் போடா போடி என்ற படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி.
ஆனால் இவரின் கம்பீரமான குரல் இவரை வில்லியாக பார்க்க ஆசைப்பட்டது சினிமா உலகம். பெரும்பாலான படங்களில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாகவே நடித்தார். சண்டக்கோழி 2, சர்கார் போன்ற படங்களில் தனது வில்லத்தனத்தை காட்டி அனைவரையும் மிரட்டியிருப்பார்.

varu1
இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துச் சுற்றி கொண்டிருக்கும் வரலட்சுமியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கொன்றால் பாவம் . இந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்த வருட ரிலீஸுக்காக ஏகப்பட்ட படங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் வரலட்சுமியை தேடி ஏராளமான படங்களின் வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் அதில் எந்தப் படத்திலேயும் வரலட்சுமி நடிக்க வில்லை. குறிப்பாக சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் ஜெனிலியாவின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் வரலட்சுமிதானாம்.

varu2
அதற்கான ஆடிசன்ஸ் எல்லாம் முடிந்து ரெடியாக இருக்கும் போது சரத்குமார் நடிக்க விடலயாம். இப்போலாம் நடிக்க வேண்டாம் என சொல்லி மறுத்து விட்டாராம். சங்கர் எவ்ளோ சொல்லியும் சரத்குமார் முடியவே முடியாதுனு சொல்லிட்டாராம்.
இதையும் படிங்க : ஒரு படத்தில் 5 சாதனைகள் ; யாரும் செய்யாததை செய்து காட்டிய நடிகர் திலகம்…
அதே போல் வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா மற்றும் காதல் போன்ற படங்களிலும் வரலட்சுமிதான் நடிக்க இருந்ததாம். சரத்குமார்தான் நடிக்க அனுமதிக்கவில்லையாம்.