Thalapathy 69: மீண்டும் விஜய்க்கு வில்லியா? செம காம்போ.. தளபதி 69 படத்தில் இணையும் அந்த நடிகை

thalapathy69
Thalapathy 69: எச்.வினோத் இயக்கத்தில் தற்போது விஜய் அவருடைய 69வது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படம் விஜய்க்கு கடைசி படம் என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்துவருகிறது.
விஜய் அரசியல் பிரவேசம் ஒரு பக்கம் சூடுபிடித்து விட்டது. ஒரு கை பார்த்து விட வேண்டும் என்ற தீவிரமாக இறங்கி விட்டார் விஜய். அவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் கோட். இந்தப் படம் வெளியாகி 450 கோடிக்கும் மேலாக வசூலை பெற்றது. தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாகவே ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை விஜய் திகழ்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: கமலின் சூரசம்ஹாரம் படத்தில் முதல்ல ஹீரோயினா நடிக்க இருந்தவர் அவரா?அப்பாடா…. தப்பிச்சிட்டாரே!
இந்த நிலையில் அவருடைய கடைசி படத்தை எச்,வினோத்தான் இயக்குகிறார் என்றதும் அனைவருக்குமே ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் எச்.வினோத்தை பொறுத்தவரைக்கும் அவர் எடுக்கும் படங்கள் எதாவது ஒரு வகையில் அரசியல் பேசும் படங்களாகவே இருக்கும். துணிவு பட சமயத்திலேயே எச்.வினோத் ‘விஜயை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு வந்தால் அரசியல் படமாகத்தான் எடுப்பேன்’ என கூறியிருந்தார்,

varalakshmi
அதை போல் அவர் அடுத்ததாக அரசியலில் முழுவதுமாக இறங்கப் போவதால் ஒரு தரமான அரசியலை படம் கண்டிப்பாக பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தில் சிவராஜ்குமார் நடிப்பதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் இன்றைய தகவலின் படி அவர் இந்தப் படத்தில் இல்லை என்று உறுதியாகிவிட்டது. மேலும் சத்யராஜிடமும் பேச்சு வார்த்தை நடந்ததாம்.
இதையும் படிங்க: அட ஆத்தாடி.. நயன் விக்கி திருமண டாக்குமெண்ட்ரிக்கு இத்தனை கோடியா? அப்போ தனுஷ் கேட்டது நியாயம் தானே?
ஆனால் சத்யராஜும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக முடியாது என மறுத்துவிட்டாராம். இந்த நிலையில் படத்தில் ஒரு பிரபல நடிகை ஒருவர் நடிக்க போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் வேறு யாருமில்லை. வரலட்சுமி சரத்குமாராம். அவர் ஏற்கனெவே விஜய்க்கு வில்லியாக சர்கார் படத்தில் நடித்து தூள் கிளப்பியிருப்பார். மீண்டும் அவர்கள் காம்போவில் இன்னொரு படம் எனும் போது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.