Categories: latest news

Thalapathy 69: மீண்டும் விஜய்க்கு வில்லியா? செம காம்போ.. தளபதி 69 படத்தில் இணையும் அந்த நடிகை

Thalapathy 69:  எச்.வினோத் இயக்கத்தில் தற்போது விஜய் அவருடைய 69வது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படம் விஜய்க்கு கடைசி படம் என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்துவருகிறது.

விஜய் அரசியல் பிரவேசம் ஒரு பக்கம் சூடுபிடித்து விட்டது. ஒரு கை பார்த்து விட வேண்டும் என்ற தீவிரமாக இறங்கி விட்டார் விஜய். அவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் கோட். இந்தப் படம் வெளியாகி 450 கோடிக்கும் மேலாக வசூலை பெற்றது. தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாகவே ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை விஜய் திகழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: கமலின் சூரசம்ஹாரம் படத்தில் முதல்ல ஹீரோயினா நடிக்க இருந்தவர் அவரா?அப்பாடா…. தப்பிச்சிட்டாரே!

இந்த நிலையில் அவருடைய கடைசி படத்தை எச்,வினோத்தான் இயக்குகிறார் என்றதும் அனைவருக்குமே ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் எச்.வினோத்தை பொறுத்தவரைக்கும் அவர் எடுக்கும் படங்கள் எதாவது ஒரு வகையில் அரசியல் பேசும் படங்களாகவே இருக்கும். துணிவு பட சமயத்திலேயே எச்.வினோத் ‘விஜயை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு வந்தால் அரசியல் படமாகத்தான் எடுப்பேன்’ என கூறியிருந்தார்,

varalakshmi

அதை போல் அவர் அடுத்ததாக அரசியலில் முழுவதுமாக இறங்கப் போவதால் ஒரு தரமான அரசியலை படம் கண்டிப்பாக பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தில் சிவராஜ்குமார் நடிப்பதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் இன்றைய தகவலின் படி அவர் இந்தப் படத்தில் இல்லை என்று உறுதியாகிவிட்டது. மேலும் சத்யராஜிடமும் பேச்சு வார்த்தை நடந்ததாம்.

இதையும் படிங்க: அட ஆத்தாடி.. நயன் விக்கி திருமண டாக்குமெண்ட்ரிக்கு இத்தனை கோடியா? அப்போ தனுஷ் கேட்டது நியாயம் தானே?

ஆனால் சத்யராஜும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக முடியாது என மறுத்துவிட்டாராம். இந்த நிலையில் படத்தில் ஒரு பிரபல நடிகை ஒருவர் நடிக்க போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் வேறு யாருமில்லை. வரலட்சுமி சரத்குமாராம். அவர் ஏற்கனெவே விஜய்க்கு வில்லியாக சர்கார் படத்தில் நடித்து தூள் கிளப்பியிருப்பார். மீண்டும் அவர்கள் காம்போவில் இன்னொரு படம் எனும் போது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

10 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

11 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

12 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

18 hours ago