என்னை சின்ன வயசுல நாலு பேர்… டிவி நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க வரலட்சுமி சொன்ன அதிர்ச்சி சம்பவம்

by Akhilan |
என்னை சின்ன வயசுல நாலு பேர்… டிவி நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க வரலட்சுமி சொன்ன அதிர்ச்சி சம்பவம்
X

varalakshmi

Varalakshmi sarathkumar: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் சொல்லி இருக்கும் அதிர்ச்சி சம்பவம் தற்போது பார்ப்பவர்களுக்கு திடுக்கிட செய்து இருக்கிறது.

முன்னணி நடிகர் சரத்குமாருக்கு தன்னுடைய முதல் மனைவி மூலம் பெற்ற மகள் தான் வரலட்சுமி. அதன் பின்னர் மனைவியை விவாகரத்து செய்தாலும் மகளை சரியாக கவனித்தார். மேலும், ராதிகா சரத்குமார் கூட வரலட்சுமி மற்றும் அவர் தாயை பார்த்து கொள்வாராம்.

ஒருகட்டத்தில் அப்பா போல வரலட்சுமி நடிப்பிற்குள் வந்தார். போடா போடி படத்திற்கு சரியான வரவேற்பு இல்லை என்றாலும் வரலட்சுமி நடிப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்தது. தொடர்ச்சியாக வாய்ப்புகளும் குவிந்தது. தமிழ் சினிமாவில் வில்லியாகவும் அவதாரம் எடுத்தார்.

Also Read: பாண்டியனை காணாமல் தேடும் மகன்கள்… என்ன ஆனது? மகளால் எடுத்த திடீர் முடிவு!

அதற்கு ராதிகா, அவர் மகள் துணை நின்று திருமணத்தினை நடத்தியது பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. கணவர் மற்றும் அவருடைய மகளுடன் வசித்து வரும் வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து நடித்தும் வருகிறார். தற்போது டிவி நடன நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக இருக்கிறார்.

varalakshmi

கலகலப்பாக பேசும் வரலட்சுமி இந்த வார எபிசோட்டில் பேசி இருக்கும் புரோமோ பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. என்னுடைய சின்ன வயதில் அப்பா மற்றும் அம்மா இருவரும் வேலைக்கு இன்னொருவர் வீட்டில் என்னை விட்டு செல்வார்கள். அப்போது என்னிடம் நாலு பேர் தவறாக நடந்து இருக்கிறார்கள்.

நீங்க ஆடியது என்னுடைய கதை போலவே இருக்கு. தற்போது எனக்கு பிள்ளை இல்லை. இருந்தும் எல்லா பெற்றோரிடமும் சொல்வது உங்க பிள்ளைக்கு குட் டச், பேட் டச் சொல்லி கொடுங்கள் என்பதுதான் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். பெற்றோர் கவனிக்காத பிள்ளை என்றாலே பாவம்தான் போல என பேச்சுகளும் அவருக்கு ஆறுதலாக வருகிறது.

Next Story