மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த பல நடிகைகளில் வேதிகாவும் ஒருவர். நடிகர் அர்ஜூன் தான் இயக்கிய மதராஸி படத்தில் வேதிகாவை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து முனி படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வெற்றியை பெறவே வேதிகா பிரபலமானார்.

ஒருபக்கம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. மல மல, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3 என பல படங்களிலும் நடித்திருக்கிறார். சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். ஸ்லிம்மாக இருப்பதுதான் இவரின் அழகுக்காக சீக்ரெட்.

அழகாக இருந்தும் சரியான இடம் கிடைக்காத நடிகைகளில் வேதிகாவும் ஒருவர். இத்தனைக்கும் பரதேசி மற்றும் காவிய தலைவன் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனாலும், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் பார்வை வேதிகா மீது படவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், மாலத்தீவு போன்ற இடங்களுக்கு சென்று பிகினி உடையில் ஜாலி பண்ணும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி பண்ணி வருகிறார். கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் தனக்கு வாய்ப்பு வரும் என நம்பி காத்திருக்கும் நடிகை இவர்.

இந்நிலையில், இடுப்பழகை அழகாக காட்டும் உடையணிந்து போஸ் கொடுத்து வேதிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com







