ஹேண்ட் பேக் ஒரு லட்சம்.. ஒரு வாட்ச் 20 லட்சம்! யாரும்மா நீ? அப்படி என்ன இருக்கு அந்த வாட்ச்ல

by Rohini |
vedhika
X

vedhika

Actress Vedhika: குட்டி பிசாசே குட்டிப் பிசாசே என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது. ‘காளை’ படத்தில் சிம்புவுக்கு சரிசமமாக ஆடி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை வேதிகா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்,

மதராசி என்ற படத்தில் அறிமுகமானாலும் பாலாவின் பரதேசி படத்தில் அங்கம்மாவாக நடித்ததன் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் ஒரு வலம் வந்தார் வேதிகா.

இதையும் படிங்க: வெற்றி வாகை சூட களத்தில் குதிக்கும் தனுஷ்… 50வது படத்துக்காக அவர் எடுக்கும் ரிஸ்க் கைகொடுக்குமா?

இருந்தாலும் ஒரு வருட இடைவெளிக்கு பிறகுதான் காவியத்தலைவன் என்ற படத்தில் தோன்றினார். அதே வேளையில் கன்னடத்தில் அவர் நடித்து வெளியான சிவலிங்கா படம் பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றிபெற்றது. அதன் பிறகு காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்தார் வேதிகா.

மும்பையை பூர்வீகமாக கொண்ட வேதிகா ஆரம்பத்தில் மாடலிங் துறையில் கால் பதித்தார். ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்த வேதிகா சூர்யாவுடன் இணைந்து ஒரு பிஸ்கட் விளம்பரத்திலும் நடித்திருந்தார். இதன் பிறகுதான் அர்ஜூனின் மதராசி படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: அடங்கப்பா எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை.. ராயன் பற்றி வாய் திறந்த செல்வராகவன்…

நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் வேதிகா. தமிழில் படங்களில் நடிக்க மீண்டும் கோடம்பாக்கம் வந்திருந்த வேதிகாவை அழைத்து பேசிய போது சில திடுக்கிடும் தகவல்களை கூறினார். அதாவது அவர் கையில் ஒரு வாட்ச் அணிந்திருக்கிறார்.

அந்த கைக்கடிகாரத்தின் விலை 20 லட்ச ரூபாயாம். அப்படி என்ன இருக்கிறது என கேட்டால் பிடித்திருந்தது. அதனால் வாங்கினேன். மிகவும் தரமான வாட்ச் என்று கூறினார். இதை கேட்டதும் தொகுப்பாளர் வாயடைத்து போனார். இதே பாணியில்தான் ஆல்யா மானசா ஒரு ஹேண்ட் பேக் வைத்திருப்பார். எங்கு போனாலும் அந்த பேக்கைத்தான் கொண்டு செல்வார்.

இதையும் படிங்க: விஜய்கிட்ட முதல்ல சொன்னதே நான்தான்! பகிரங்கமாக கூட்டணி பற்றி கூறிய கமல்

அந்த ஹேண்ட் பேக்கின் விலை ஒரு லட்சமாம். அவரின் கணவர் சஞ்சீவ் ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுத்தது என அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Next Story