இப்பதான் கபாலி, விக்ரம்!.. 70 வருடங்களுக்கு முன்பே படத்தை வேற லெவலில் விளம்பரம் செய்த ஏவிஎம்!..

Published on: December 4, 2023
mgr
---Advertisement---

AVM PRoduction: தமிழ் சினிமாவில் மிகவும் பழமைமிக்க தயாரிப்பு நிறுவனமாக இருந்தது ஏவிஎம் நிறுவனம். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, பாகவதர் , ரஜினி, கமல் என பல முன்னனி நடிகர்களை வைத்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்து மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாக அமைந்தது ஏவிஎம் நிறுவனம்.

அந்த காலத்தில் இருந்து இன்று வரை இந்த நிறுவனத்தின் மீது சினிமாவில் ஒரு தனி மரியாதையே இருந்து வருகிறது. அனைவருக்கும் ஒரு முதலாளியாகவே இருந்து வந்தார் ஏவிஎம் மெய்யப்பச்செட்டியார். அதன் பிறகு அவருடைய புகழுக்கு இணையாக அவருடைய மகனான சரவணன் அதை தக்க வைத்துக் கொண்டார்.

இதையும் படிங்க: டென்சன் பண்ணாதீங்க பாஸ்!. வெற்றிமாறனை கடுப்பாக்கிய ஹரிஸ் கல்யாண்!.. வட போச்சே!.

இன்று வரை எந்த ஒரு பொது மேடையானாலும் அங்கு வரும் ஏவிஎம் சரவணன் கைக்கட்டி நிற்பதையேதான் பார்க்க முடியும். அந்தளவுக்கு பெருந்தன்மையாகவும் அடக்கமாகவும் இருக்கக் கூடிய ஒரு தயாரிப்பாளர்தான் ஏவிஎம் சரவணன்.

பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா முதன் முதலில் ‘வாழ்க்கை’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம்தான் தயாரித்து வெளியிட்டது. அந்தப் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: அஜித் நடிக்க வேண்டிய மாஸ் கதை!.. சியான் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்.. அட அந்த படமா?…

அதனால் அந்த படத்தை ஹிந்தியிலும் எடுக்க முடிவு செய்து பஹார் என்ற பெயரில் ஹிந்தியிலும் தயாரித்தது ஏவிஎம். ஹிந்தியிலும் அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக அதை  மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டும் என  எண்ணினார்களாம். இந்த ஹிந்தி பஹார் படத்திலும் கதாநாயகியாக வைஜெயந்தி மாலாதான் நடித்தார்.

இப்போது கபாலி படத்தை ஆகாயத்தில் விளம்பரப்படுத்தினார்கள். அதே போல் விக்ரம் படத்தை ஓடும் ட்ரெயின்களில் போஸ்டர் ஒட்டி விளம்பரப் படுத்தினார்கள். அதே போல் இந்த பஹார் படத்தை விளம்பரம் படுத்த படகுகளில் வரிசையாக போஸ்டர் ஒட்டி அந்த போஸ்டர் இரவு நேரத்தில் தெரிய வேண்டும் என்பதற்காக அதை சுற்றி வரிசையாக ட்யூப் லேட்களையும் கட்டி விளம்பரப்படுத்தினார்களாம்.

இதையும் படிங்க: என்னவேணுனாலும் சொல்லுங்கப்பா! இதுல நான்தான் கிங் – ரஜினியை விட மாஸ் காட்டிய விஜய்

நடுக்கடலில் இரவு நேரத்தில் கரையில் இருந்து பார்த்தாலும் அந்த போஸ்டர் தெரியவேண்டும் என்பதற்காக இந்தளவுக்கு மெனக்கிட்டிருக்கிறார்கள் ஏவிஎம் நிறுவன உரிமையாளர்கள்.  அந்தக் காலத்தில் அப்பவே இந்தளவு விளம்பரப்படுத்தியிருக்கிறது ஏவிஎம் நிறுவனம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.