வேறொரு நல்ல ஆர்ட்டிஸ்ட போட வேண்டியதுதானே? சரத்குமாரால் கடுப்பான அந்த டாப் நடிகை

by Rohini |
sarath
X

sarath

Sarathkumar: தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டாராக இன்றுவரை ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு வருகிறார் நடிகர் சரத்குமார். வில்லனாக ஹீரோவாக இப்போது கேரக்டர் கதாபாத்திரமாக என தொடர்ந்து சினிமாவில் தன்னை முன்னிலை படுத்தி வருகிறார்.

சூரியன் என்ற திரைப்படம்தான் சரத்குமாரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது. அதுவரை பல முன்னனி ஹீரோக்களுக்கு வில்லனாகவே நடித்து வந்தார். பட்டப்படிப்பை முடித்த சரத்குமார் ஆணழகன் போன்ற போட்டிகளிலும் பங்கேற்று பாடிபில்டராக இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: எதை பார்த்தாலும் எச்சில் ஊறுதே!.. பூஜா ஹெக்டேவுக்கு பொறந்தநாள்.. பக்கா ட்ரீட் இதோ!..

தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிப் படங்களிலும் நடித்து ஒரு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் சரத்குமார். இவர் நடித்த சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக போன்ற படங்கள் எல்லாமே காலத்தால் என்றும் அழியாப் படங்களாகவே அமைந்து விட்டன.

இந்த நிலையில் சரத்குமார் தெலுங்கில் முதன் முதலில் நடிக்கும் போது முதல் ஷார்ட்டே நடிகை விஜயசாந்தியுடன்தானாம். அந்த சமயத்தில் விஜயசாந்தி ஒரு சூப்பர் ஸ்டாராக அனைவராலும் கொண்டாடப்பட்ட நடிகையாக இருந்தாராம்.

இதையும் படிங்க: லியோவுக்கு அடுத்த ஆப்பு!.. அதிகாலை காட்சி இல்லை!. முதல் காட்சி நேரம் இதுதான்!..

ஷார்ட் ஆரம்பமானதும் ஒரு நீளமான வசனமாம். அதை பல முறை சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தாராம் சரத்குமார். அதனாலேயே டேக்குகள் நிறைய எடுத்தாராம். இதனால் கடுப்பான விஜயசாந்தி ‘வேறொரு நல்ல ஆர்ட்டிஸ்ட போட வேண்டியதுதானே,எவ்ளோ நேரம் எடுக்குறாரு? கடுப்பா இருக்கு’ என்று சொல்லி எரிச்சலடைந்தாராம்.

இப்படித்தான் தன்னுடைய திரையுல வாழ்க்கை ஆரம்பமானது என சரத்குமார் ஒரு பேட்டியில் கூறினார். இதே விஜயசாந்தியுடன் பின்னர் தமிழில் ராஜஸ்தான் என்ற படத்தில் நடித்தார் சரத்குமார். அதில் இருவரும் மாஸ் காட்டி நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அப்போ சங்கீதாவால் தான் விஜய்க்கு இத்தனை பிரச்னையா?… ஆசையாய் சொல்லி பல்ப் வாங்கிய சம்பவம்..!

Next Story