ஏன்டா நடிச்சோம்னு ஆயிடுச்சி!. மணிரத்னம் பட அனுபவம் சொல்லும் பிரபல நடிகை...

சன் டிவியில் ஒளிபரப்பாகிய கோலங்கள், அழகி போன்ற சீரியல்களின் மூலம் மக்கள் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்தவர் நடிகை விஜி சந்திரசேகர். இவர் என்னதான் வெள்ளித்திரையின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தாலும் இவர் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது சின்னத்திரை தொடர்களே. இவர் நடிகை சரிதாவின் சகோதரி ஆவார்.

இவர் தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் கிழக்கு சிமையிலே, ஆரோகணம் போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார். பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து தன்னை ரசிக்கும்படி செய்தார்.

இதையும் வாசிங்க:முதல் காட்சி ரஜினியுடன்!.. கடைசி காட்சி கமலுடன்! – முதல் படத்திலேயே ஜாம்பவான்களுடன் நடித்த நடிகை..

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கே. பாலசந்தர்தான் இவரை திரையில் முதலில் அறிமுகப்படுத்தினார். பின் தொடர்ந்து பாரதி ராஜா, மணிரத்னம் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க தொடங்கினார்.

இவருக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசையில்லையாம். இவர் நன்றாக படிக்க வேண்டும் எனும் எண்ணத்தோடு இருந்தது மட்டுமல்லாமல் வீணை கற்று கொள்வதில்தான் அதிக ஆர்வம் காட்டினாராம். ஆனால் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததால் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள ஆசைப்பட்டாராம்.

இதையும் வாசிங்க:நான் எப்ப அவர் மாதிரி ஆகுறது!. நடிகையிடம் புலம்பிய ரஜினிகாந்த்.. இவ்வளவு நடந்திருக்கா?!..

மேலும் இவர் மணிரத்னத்தின் படத்தில் நடித்ததை தான் விரும்பவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். ஆனால் முதலில் அக்க கதாபாத்திரத்தில் நடிக்க பானுப்பிரியாவைதான் அழைத்தார்களாம். ஆனால் அவர் சில காரணங்களுக்காக நடிக்க வரவில்லையாம்.

பின் ஒரு நாள் நடிகை சுஹாசினி விஜிக்கு போன் செய்து அவரை நடிக்க அழைத்தாராம். மேலும் பானுப்பிரியா வர முடியாததால் அக்கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வர முடியுமா என கேட்டாராம். மணிரத்னம் படம் என்றது விஜியும் சம்மதித்தாராம். ஆனால் படத்தில் இவர் நடித்த காட்சிகளை பின்னர் நீக்கி விட்டனராம். குறைந்த அளவு காட்சிகளை மட்டுமே படத்தில் வைத்திருந்தனராம். அது இவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியதாம். அதனால் மணிரத்னம் படத்தில் நடித்ததை எண்ணி தான் மிகவும் வருத்தப்படுவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:வடிவேலுவுடன் 100 படங்களில் நடிக்க வந்த வாய்ப்பு! முடியவே முடியாது என மறுத்த நடிகை

 

Related Articles

Next Story