ஆனா ஆவன்னா தெரியாது!.. ஆனாலும் அரசியலில் குதித்த விந்தியா.. எல்லாத்துக்கும் அதுதான் காரணம்..

by Arun Prasad |   ( Updated:2023-06-04 02:56:34  )
Vindhya
X

Vindhya

சினிமா துறையில் ஹீரோயினாக அவ்வளவாக ஜொலிக்கவில்லை என்றாலும் பல திரைப்படங்களில் கதாநாயகியாக வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் விந்தியா. இவர் “சங்கமம்” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

Vindhya

Vindhya

இவர் சுந்தர் சி நடித்த “ஆயுதம் செய்வோம்” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திக்கொண்டார்.

விந்தியா ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது ஜெயலலிதாவை சென்று சந்தித்தார் விந்தியா. அங்கே விந்தியாவிடம் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்படி கூறினார். ஆனால் விந்தியாவுக்கு அரசியலில் ஆனா ஆவன்னா கூட தெரியாது. ஆதலால் முதலில் ஜெயலலிதாவிடம் தனக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என கூறினார். எனினும் ஜெயலலிதா விந்தியாவிடம் பேசி சம்மதிக்க வைத்தார்.

Jayalalithaa

Jayalalithaa

அதன்படி தேர்தல் சமயத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஜெயலலிதா ஆட்சியில் இவருக்கு பல பதவிகள் தேடி வந்தன. ஆனால் தனக்கு அரசியல் குறித்த அனுபவம் இல்லை என்று கூறி அந்த பதவிகளை எல்லாம் மறுத்துவிட்டாராம். ஜெயலலிதா இறந்தபிறகு அரசியலை விட்டு விலகிவிடலாம் என நினைத்தார் விந்தியா.

Vindhya

Vindhya

ஆனால் எடப்பாடி பழனிசாமி விந்தியாவை அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக ஆக்கினார். தற்போது அரசியலில் அவ்வளவு ஆக்டிவாக இல்லை என்றாலும் அமைதியாக அதிமுகவுடனே பயணம் செய்து கொண்டிருக்கிறார் விந்தியா.

Next Story