சமீபத்தில் ஹேமா கமிட்டி வந்த பிறகு மலையாளத் திரை உலகையே ஆட்டிப் படைத்துவிட்டது. அனைத்துப் பிரபலங்களும் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். அவ்வளவுக்கும் ஏன்..? மலையாள நடிகர் சங்க நிர்வாகிகளே கூண்டோடு கலைந்தனர்.
இதெல்லாம் சகஜமப்பா என்பது போல நெட்டிசன்கள் சிலர் பேசிவந்ததும் அதே சமயம் ஹேமா கமிட்டியால ஒண்ணும் செய்ய முடியாது என்றும் விவாதம் செய்தனர். அதிலும் ராதிகா, ஊர்வசி என பல பிரபல நடிகைகளும் இதுபற்றி கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். இந்திய சினிமா உலகம் முழுவதுமே இது போன்ற ஹேமா கமிட்டியைக் வர வேண்டும் என்றும் பேச்சு வந்தது.
அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பேச்சு தான் எங்கு பார்த்தாலும் அடிபட்டுக்கொண்டே இருந்தது. இதற்கு ஒரு பிரபலம் சொன்ன காரணம் சற்றே அதிர்ச்சியாகக்கூட இருந்தது. அதாவது வயநாடு நிலச்சரிவு பிரச்சனையை மறைக்கத் தான் ஹேமா கமிட்டியைக் கொண்டு வந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த வகையில் எங்கு பார்த்தாலும் அதாவது வலைதளத்தை திறந்தாலே இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிய பேச்சாகத் தான் இருந்தது. ஒரு காலத்தில் ‘மடிப்பு அம்சா’ என்று அழைக்கப்பட்ட நடிகை விசித்ராவும் தன் பங்கிற்கு ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.
எனக்கு தெரிஞ்சு 100 பர்சன்ட் ஜென்டில்மேன் என்றால் அது டி.ராஜேந்தர் சார் மட்டும்தான். அந்த விஷயம் சினிமால இருக்க எல்லாருக்குமே தெரியும். இதை சொல்வதால் யாரும் என்னை திட்டக் கூட மாட்டாங்க. மதிப்பு, மரியாதை போன்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல், யோக்கியன் என்று சொன்னால் நான் டி.ராஜேந்தர் சாரை சொல்லுவேன் என்கிறார் நடிகை விசித்ரா.
Also read: கமலாவது அட்லீயாவது! எல்லாமே வெறும் வதந்தி.. வெளியான புது அப்டேட்
தமிழ்த்திரை உலகில் டி.ராஜேந்தருக்கு கிசுகிசு எதுவும் வந்ததே இல்லை. அவர் படங்களில் கிளாமர் தூக்கலாக இருக்கும். ஆனா இந்த ஜென்டில்மேன் மட்டும் நடிகையைத் தொடக்கூட மாட்டார். ஆனால் ஆட்டத்தில் மன்னன் என்று றெக்கைக்கட்டி ஆடுவார். அதனால் தான் அவரை தாய்க்குலங்கள் எல்லாருக்கும் ரொம்பவே பிடித்துவிட்டது.
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…