பாட்ஷாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சூப்பர்ஸ்டார்...!செந்தூர பாண்டி ஹீரோயின் நெகிழ்ச்சி
பெரியவங்க சின்னவங்கன்னு பார்க்க மாட்டாரு. எல்லாருக்கிட்டயும் ஈக்குவலா பேசுவாரு. இது யாருன்னு தெரியுமா? தொடர்ந்து படிங்க...தெரியும்.
தமிழ்சினிமாவின் செல்லக்கண்ணு யுவராணியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 90களில் இவர் கலக்கல் கவர்ச்சியை யாரும் மறக்க முடியாது.
1993ல் விஜய் உடன் இவர் இணைந்து நடித்த செந்தூரபாண்டி படத்தைப் பார்த்தால் இவரது முழு திறமையும் தெரியவரும். முத்தாய்ப்பாக நடித்து இருந்தார். அதன் பின்னர் 1995ல் இவரது பாட்ஷாவும், செல்லக்கண்ணு படமும் இவரது மார்க்கட்டைத் தூக்கி விட்டது.
இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் உடன் நடித்த அனுபவங்களை பகிர்கிறார்.
யுவராணி நடித்த செந்தூரபாண்டி, பாட்ஷா, சுறா, சிங்கம், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சித்தி சீரியலிலும் நடித்து பேர் வாங்கினார்.
செந்தூரபாண்டி படத்தில் விஜய் உடன் நடித்ததில் நல்ல ஹிட் ஆனது. பாட்ஷாவில் ரஜினியுடன் சேர்ந்து நடித்ததில் கிடைத்த அனுபவங்களை மறக்கவே முடியாது. கார்த்தியுடன் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நிறைய அனுபவங்கள் கிடைத்தது.
பாட்ஷா ரஜினியோட மைல் கல். முதல்ல ரஜினி சார்க்கு நான் தேங்ஸ் சொல்லணும். என்னை வற்புறுத்தி அந்த மூவில நடிக்க வச்சாங்க. ரஜினி சார் எனக்கு பர்சனலா கால் பண்ணி சொன்னாரு.
அப்போ நான் தங்கை கேரக்டரில் நடிக்கத் தயங்கினேன். அந்த மாதிரி இல்லம்மா...நீ செந்தூர பாண்டில துறு துறுன்னு நடிச்சிருப்பே..உனக்கு அந்த மாதிரி முத்திரை வராது. அதான் கேட்டேன் னாரு. அதே போல இந்தப்படத்தில் என்னோட நடிப்புக்கு நல்ல பேரு கிடைச்சது.
ரஜினி சார் ரொம்ப கூல் பர்சன். பண்பு, அடுத்தவங்க கிட்ட சின்னவங்க, பெரியவங்கன்னு இல்லாம எல்லாருக்கிட்டயும் எப்படி ஈக்குவலா பேசணும். பார்த்த உடனேயே ஹாய் குட்மார்னிங் எப்படி இருக்கன்னு கேட்பாரு. லைட் மேன் கிட்ட எல்லாம் அவ்ளோ கூலா பேசுவாரு. ப்ரண்ட்லியா பேசுவாரு.
அதே போல ஷாட் முடிஞ்ச உடனே விஜயவாஹினி ஸ்டூடியோல எல்லாம் ஒரு கூரைக்கு கீழே ஹாயா படுத்திருப்பாரு. அவருக்கு ஏசி ரூம் கொடுத்திருப்பாங்க. ஏன் சார் இங்க வந்து படுத்திருக்கீங்கன்னு கேட்டா இதுல வருத சுகம் எதுலமா இருக்குன்னு கூலா பேசுவாரு.
சுறா படத்தில் நடித்த அனுபவம்....
செந்தூரபாண்டிக்கு பிறகு விஜய் உடன் நடித்த இந்த அனுபவம் பற்றி சொல்லணும்னா அவர் எப்பவுமே ப்ரண்ட்லியா பழகுறவரு. கொஞ்சம் ரிசர்வ் டைப். செட்ல பார்க்கும்போது ரொம்ப ரிசர்வ். ரொம்ப கொயட். யாருக்கிட்டயும் பேச மாட்டாரு. ஆனா ஷாட்ல நடிக்கும்போது அவர் கலக்கிருவாரு.
ஸ்டார்ட்டிங்க்ல இருந்து பார்க்கும்போது அவர் எப்பவும் கொயட் தான். ஆனா கேரியர்ல ரொம்ப மெச்சுரிட்டியா ஆயிட்டாரு. இப்போ நிறைய நாலெட்ஜோட பேசுறாரு. ஆடியோ லாஞ்ச்ல எல்லாம் இப்படி பேசுவாரான்னு நான் நெனச்சுக்கூட பார்க்கல. சர்க்கார் ஆடியோ லாஞ்ச்ல அவர் பேசிய மூணு விஷயங்கள்ல பாத்தா அவர் வாழ்க்கைல அனுபவிச்சதத்தான் சொல்றாரு.
உம்முன்னு இரு. கம்முன்னு இரு. வாழ்க்கைல ஜம்முன்னு இருன்னு சொல்வாரு. அவர் எந்த அளவுக்கு அதை அனுபவிச்சிருந்தாருன்னா ஒரு ஸ்டேஜ்ல இந்த வார்த்தையை சொல்லிருப்பாரு? அவர் நல்லாவே அவர் கேரியரைக் கொண்டு போய்க்கிட்டு இருக்காரு. அவ்ளோ தான் சொல்லுவேன் என கூலாக புன்னகை பூ பூக்கிறார் யுவராணி. சித்தி, தென்றல்னு டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.