கண்டுகொள்ளாத இயக்குனரால் கடுப்பில் இருக்கும் பப்ளிமாஸ் நடிகை....!
ஹீரோயின் என்றாலே ஒல்லியாக சிறிய இடையுடன் உதாரணமாக நடிகை சிம்ரன் போல இருக்க வேண்டும் என பலர் எண்ணி வந்த நிலையில் பார்ப்பதற்கு சற்று கொழுக் மொழுக் என இருந்தாலும் சினிமாவில் முன்னணி நடிகையாக சாதிக்கலாம் என்று நிரூபித்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தான் பப்ளிமாஸ் நடிகைகளுக்கு கோலிவுட்டில் அடித்தளம் அமைத்து கொடுத்தவர்.
இவரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமானவர் தான் அந்த பப்ளிமாஸ் நடிகை. இவர் கொழுக் மொழுக் தோற்றத்தில் இருக்கும்போது தான் ரசிகர்கள் பலருக்கு இவரை பிடித்திருந்தது. ஆனால் அம்மணி என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென உடல் எடையை குறைத்து விட்டார்.
பார்க்க அழகாக பப்ளிமாஸ் போல இருந்த நடிகை திடீரென உடல் எடையை குறைத்து பார்க்கவே பரிதாபமாக மாறியதால் ரசிகர்கள் அந்த நடிகையை கண்டுகொள்ளவில்லை. மேலும் ஒல்லியான பிறகு நடிகையை பார்ப்பதற்கு வயதானவர் போன்று தோற்றமளித்ததால் சினிமாவில் அவரின் மார்க்கெட் மொத்தமாக படுத்துவிட்டது.
தற்போது கைவசம் அவ்வளவாக படங்கள் இல்லாத நிலையில் நடிகை அவ்வப்போது விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவு செய்து வந்தார். இதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்கும் என நடிகை எதிர்பார்த்தார். ஆனால் யாரும் அவரை கண்டுகொள்வதாக தெரியவில்லை.
இதனால் பொறுத்தது போதும் நேரடியாக நாமே களத்தில் இறங்குவோம் என முடிவு செய்த நடிகை முன்னதாக தன்னை வைத்து பேய் படம் எடுத்த இயக்குனரை அழைத்து பட வாய்ப்பு கேட்டாராம். ஆனால் இயக்குனரோ நடிகையை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம். இதனால் நடிகை உச்சக்கட்ட கடுப்பில் உள்ளாராம்.