
Cinema News
ஹீரோக்களை கடுப்பாக்கி டாப் ஹீரோயின்களுடன் டூயட் பாடிய காமெடி நடிகர்கள்! நயன் – யோகி ஜோடி உச்சக்கட்டம்
சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு படம் என்றால் ஹீரோ அவருக்கு ஜோடியாக ஒரு ஹீரோயின் இவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக ஒரு காமெடி நடிகர் இதோடு சண்டைக் காட்சிகள் , பாடல்கள் என பின்பற்றி வரும் ஒரு வழக்கமாகவே இருக்கின்றது. ஆனால் அது இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது என்றே சொல்லலாம். அதையெல்லாம் உடைத்து சற்று வித்தியாசமாக மக்களுக்கு போர் அடிக்காத வகையில் கதையில் பல மாற்றங்களை செய்து வருகின்றனர் இயக்குனர்கள். அந்த வகையில் ஒரு காமெடி நடிகருக்கு டாப் ஹீரோயின்கள் ஜோடியான சம்பவங்கள் எல்லாம் அப்பவே நடந்திருக்கின்றது.

banu
தங்கவேலு – பானுமதி : நடிகை பானுமதி எப்பேற்பட்ட ஒரு ஆளுமை என்று அனைவருக்கும் தெரியும். சிவாஜி , எம்ஜிஆரே அவருடன் நடிக்க தயங்கும் போது மிகவும் எளிதாக பானுமதியோடு சேர்ந்து நடித்தார் தங்கவேலு. ரம்பையின் காதலி என்ற படத்தில் இவர்தான் லீடு ரோலில் நடித்தார்.

vijaya
நாகேஷ் – கே.ஆர்.விஜயா : தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றே நாகேஷை சொல்லலாம். தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நாகேஷ். இவர் இல்லாத அந்தக் கால படங்களை காண இயலாது. அந்த அளவுக்கு கால்ஷீட் பிஸியான நடிகராக வலம் வந்தவர். பொதுவாக மனோரமா மட்டும் ஜோடியாக நடித்து வந்த நிலையில் சர்வர் சுந்தரம் படத்தில் கே.ஆர்.விஜயாவுக்கு ஜோடியாக மாறினார் நாகேஷ். அதையும் ரசிகர்கள் ரசித்தனர். ஆனால் பட முடிவில் முத்துராமனுக்கு ஜோடியானார் கே.ஆர்.விஜயா.

saro
சந்திரபாபு – சரோஜா தேவி : எம்ஜிஆரின் ஆஸ்தான ஹீரோயினாக பார்க்கப்பட்டவர் நடிகை சரோஜா தேவி. எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெயரையும் பெற்றவர். அதோடு சிவாஜி, ஜெமினிகணேசன் என முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சரோஜா தேவி சந்திரபாபுவுக்கு ஜோடியாக சபாஷ்மீனா என்ற படத்தில் நடித்தார். அப்போதுதான் சரோஜா தேவி நடிக்க வந்த புதுசு.

nagma
கவுண்டமணி – நக்மா : இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்க வில்லை என்றாலும் மேட்டுக்குடி படத்தில் நக்மாவுடன் சேர்ந்து கண்டிப்பாக நானும் டூயட் பாடுவேன் என அடம்பிடித்து நடித்தவர் கவுண்டமணி. அதுவும் ஹீரோக்களுக்கே சான்ஸ் கொடுக்கிறீங்க, எங்களுக்கும் கொடுங்க என்று நக்மாவுடன் அந்தப் படத்தில் ஆடியிருப்பார். ஆனாலும் அதுவும் ரசிகர்கள் ரசித்தார்கள்.

yogi
யோகிபாபு – நயன்தாரா : இந்த ஜோடியைத்தான் யாரும் எதிர்பார்க்கவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயனுக்கு ஜோடியாக் யோகிபாபுவா? என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதுவும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வரும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பெரிய வில்லனாகவே மாறினார் யோகிபாபு. அந்த அளவுக்கு ஒரு சில பேர் காண்டாகினர். எனினும் அந்த கோலமாவு கோகிலா படம் யாரும் எதிர்பார்க்காத அளவில் வெற்றியை பெற்றது.